ஹோம் /மயிலாடுதுறை /

மயிலாடுதுறையில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கம் - மாணவர்கள், பொதுமக்கள் தவிப்பு!

மயிலாடுதுறையில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கம் - மாணவர்கள், பொதுமக்கள் தவிப்பு!

மயிலாடுதுறையில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கம்

மயிலாடுதுறையில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கம்

Mayiladudurai News | மயிலாடுதுறையில் இருந்து சில முக்கிய இடங்களுக்கு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய கல்லூரிகள் இருக்கும் தரங்கை சாலை வழியாக காரைக்கால், பொறையார், தரங்கம்பாடி உள்ளிட்ட ஊர்களுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தரங்கை சாலையில் அமைந்திருக்கும் தருமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரத்தில் இருக்கும் தருமபுரம் ஆதீனம் கலை கல்லூரி, மன்னம்பந்தலில் இருக்கும் A.V.C கலை கல்லூரி இதுபோன்ற பள்ளி, கல்லூரிகளில் 10,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இதில் 60% மாணவ, மாணவிகள் பேருந்து மூலம் பள்ளி கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், தினமும் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்வதற்கு தரங்கை சாலையில் இயக்கப்படும் பேருந்துகளை நம்பி இருக்கிறார்கள். காலை கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் பாதுகாப்பு இல்லாமல் செல்கிறார்கள். இதனால் சில விபத்துகள் நடக்கிறது.

இந்நிலை தொடர்ந்தால் அதிகளவில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. கல்லூரிக்கு செல்லும் அவசரத்தில் மாணவ, மாணவிகள் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் பேருந்தில் ஏறி அச்சத்திலே பயணிக்கிறார்கள். அதேபோல் மாலை பள்ளி கல்லூரிகள் முடிவடைந்து வீட்டிற்கு திரும்ப பேருந்து வசதி குறைந்த அளவில் இயக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து முழுவதும் பயணிப்பதால் பொதுமக்கள் மாணவர்களிடம் மள்ளுகட்டியே பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை பள்ளி கல்லூரி வரை கூடுதலாக பேருந்து இயக்க பொதுமக்களுக்கும், மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் : கணபதி

Published by:Karthi K
First published:

Tags: Local News, Mayiladuthurai