ஹோம் /மயிலாடுதுறை /

கிசான் உதவி தொகை பெற ஆதாரை இணையுங்கள்.. மயிலாடுதுறை விவசாயிகளுக்கு கடைசி வாய்ப்பு..!

கிசான் உதவி தொகை பெற ஆதாரை இணையுங்கள்.. மயிலாடுதுறை விவசாயிகளுக்கு கடைசி வாய்ப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

Mayiladuthurai District News : மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கிசான் உதவித் தொகை பெற ஆதாரை இணைக்க வேண்டும் என்று வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கிசான் உதவித் தொகை பெற ஆதாரை இணைக்க வேண்டும் என்று வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மயிலாடுதுறை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளதாவது; 2019ம் ஆண்டு முதல் பிரதமரின் சம்மான் நிதி திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தினால் சுயமாக நிலம் வைத்திருப்போர்களுக்கு உதவித் தொகையாக 4 மாத்திற்கு ஒரு தடவை ரூ.2 ஆயிரம் வீதம் என 6 அயிரம் 3 தவணை ஆசூண்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க : வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா..? மயிலாடுதுறையில் இப்படி ஒரு பெருமையான தலமா..?

இந்த திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை கிடைக்க வேண்டுமானல், ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது. இந்தாண்டில், பி.எம். கிசான் 13-வது தவணையாக அதாவது 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய உள்ள காலத்திற்கான தவணை தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பி.எம்.கிசான் தவணை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுதொடர்பாக கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால், உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Mayiladuthurai