ஹோம் /மயிலாடுதுறை /

ஜெயலலிதா நினைவு நாள்- மயிலாடுதுறையில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

ஜெயலலிதா நினைவு நாள்- மயிலாடுதுறையில் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளான இன்று அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளான இன்று அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதலமைசர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு மறைந்த நிலையில், நேற்று 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவுநாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த நிலையில், நேற்று 6 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க சார்பில் நிர்வாகிகள் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தற்போதைய சூழலில் அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என பிரிந்துள்ளது. அதனால், இரு தரப்பு ஆதரவாளர்களும் தமிழ்நாடு முழுவதும் தனித் தனியே நினைவு நாளை அனுசரித்தனர். சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். அதேபோல, ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களுடன் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இதன்தொடர்ச்சியாக, ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அதிமுக சார்பில் நடைபெற்றது. திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் இருந்து அமைதி ஊர்வலம் தொடங்கியது. இதற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் தலைமை தாங்கினார். அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், நகர செயலாளர் செந்தமிழன் ஆகியோர் முன்னணி வகித்தனர்.

ஊர்வலம் கச்சேரி ரோடு வழியாக பேருந்து நிலையம் அருகே வந்தடைந்தது. பின் அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் நாஞ்சில் கார்த்திக், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் முருகவேல், முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மணல்மேடு நகர செயலாளர் தொல்காப்பியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:  கணபதி (மயிலாடுதுறை)

First published:

Tags: Jayalalitha, Local News, Mayiladuthurai, Tamil News