ஹோம் /மயிலாடுதுறை /

மயிலாடுதுறையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்

மயிலாடுதுறையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்

சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

Mayiladuthurai District News : மயிலாடுதுறையில் கால்வாய்கள், குளங்கள் நகராட்சி ஊழியர்களால் தூர்வாரப்பட்டு சாலைகளில் இருக்கும் பள்ளங்களை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறையில் கால்வாய்கள், குளங்கள் தூர்வாரப்பட்டு சாலைகளில் இருக்கும் பள்ளங்களை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.

  தமிழ்நாட்டில் கடந்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அதனால் கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. அதில் பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்கள் பெரும் பாதிப்படைந்தன.

  மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கனமழையால் மயிலாடுதுறையின் முக்கிய சாலைகள் சேதமடைந்து, அனைத்து குளங்களும் கால்வாய்களும் நிரம்பி சாலைக்கு வரும் நிலை ஏற்பட்டது.

  சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

  இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தற்போதைக்கு மழை ஓய்ந்த நிலையில் இருப்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த சாலைகளை மயிலாடுதுறை நகராட்சி சிமெண்ட், ஜல்லி கலவை கொண்டு பள்ளங்களை சரி செய்யும் பணி நடைபெறுகிறது.

  இதையும் படிங்க : சோழர்களின் புகழ்மிக்க துறைமுகம்... பூம்புகாரில் சுற்றுலா பயணிகள் பார்க்கவேண்டிய முக்கிய இடங்கள்

  மேலும் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணி நடைபெறுகிறது. குளங்களில் காணப்படும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. முக்கியமாக அரசு பொது மருத்துவமனை சாலை, காமராஜர் சாலை, காந்திஜி சாலை போன்ற முக்கிய இடங்களில் தூய்மை பணி நடைபெறுகிறது.

  மயிலாடுதுறை செய்தியாளர் - கணபதி

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Mayiladuthurai