ஹோம் /மயிலாடுதுறை /

திருமண தடை அகல வேண்டுமா? கட்டாயம் சீர்காழியில் உள்ள இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க!

திருமண தடை அகல வேண்டுமா? கட்டாயம் சீர்காழியில் உள்ள இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க!

சீர்காழி ஓசை நாயகி அம்பாள் சன்னதியின் சிறப்புகள்

சீர்காழி ஓசை நாயகி அம்பாள் சன்னதியின் சிறப்புகள்

கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபடுவது மிகவும் விசேஷம்

  • Local18
  • 3 minute read
  • Last Updated :
  • Sirkali (Sirkazhi) | Mayiladuthurai

சீர்காழி ஓசை நாயகி அம்மன் கோவிலின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்

ஓசை நாயகி கோயில் - பெயர் காரணம்

சீர்காழி ஞானசம்பந்தர் குழந்தை பருவத்தில் ஞானப்பால் உண்டு சீர்காழியிலிருந்து தன் தந்தை சிவப்பாத இருதயரின் தோல் மேல் அமர்ந்து திருகோலாக்கா கோயில் வருகிறார். சீர்காழியில் ஞானப்பால் உண்ட பிறகு ஞானசம்பந்தர் வரும் முதல் கோயில் இதுதான்.

ஞானசம்பந்தர், சிவனை நினைத்து கைத்தாலமிட்டு பாடி வருகிறார். அப்பொழுது இதனை கவனித்த சிவபெருமான் இக்குழந்தைக்கு கை சிவந்து விடுமே என்ற எண்ணத்தில் பஞ்சாஷ்சங்கர மந்திரத்தை உபதேசித்து பவுன் தானம் அனுக்கிரகம் செய்கிறார். அந்த பொற்தாளத்திற்கு சத்தம் வராது. செப்பு வெண்கலம் என ஏதாவது வழங்கினால் தான் சத்தம் வரும். சிவன் பொன்னை வழங்கியதால் அதற்கு சத்தம் இல்லை. ஞானசம்பந்தர் பிறகு தேவாரத்தை பாடி கொண்டே அம்பாள் சன்னதிக்கு செல்கிறார்.

அங்கு ஓசை கொடுத்த நாயகி அம்பாளிடம் பிரார்த்தனை செய்கிறார். அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஓசையை அனுகிரகம் செய்கிறார். இவருக்கு ஓசை வழங்கியதால் அம்பாளுக்கு ஓசை கொடுத்த நாயகி என பெயர் வந்தது. ஞான சம்பந்தருக்கு சிவன் தாளத்தை வழங்கியதால் தாளபுரீஸ்வரர் என பெயர் வந்தது.

ALSO READ | தேவாரம் பாடப்பெற்ற சீர்காழி சட்டநாதர் கோயிலின் சிறப்புகள்

இந்நிகழ்வு ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 200 ஆண்டுகளுக்குப் பின் 9 ஆம் நூற்றாண்டில் ஞானசம்பந்தருக்கு தாளம் வழங்கியதை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார்.

ஓசை நாயகி அம்பாள் சன்னதியின் சிறப்புகள்:

1979-ம் ஆண்டு நாகர்கோவில் அருகில் உள்ள இருள கோபுரம் என்னும் ஊரில் ஒரு தம்பதிக்கு ஆண் வாரிசு பிறந்து 7 வயது வரை பேச்சு வரவில்லை. அக்குழந்தையின் தந்தை ஒரு மருத்துவர். அவர் சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் என அனைத்திலும் முயற்சி செய்தும் ஒரு பயனும் இல்லை. அக்குழந்தை அம்மா என்று கூட அழைக்கவில்லை. தன் மகனை நினைத்து சோகத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் அவர் வீட்டிற்கு ஒரு பெரியவர் வருகிறார். அவர் சீர்காழியில் இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்பாளின் வரலாற்றை பற்றி அறிந்தவர்.

அப்பெரியவரிடம் தன் குழந்தையை பற்றி கூறி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் குழந்தையின் தந்தை. அப்போது பெரியவர் திருக்கோலாக்கா கோவில் பற்றி கூறி ஜடப்பொருளான தாளத்துக்கே ஓசை தரும் போது உன் மகனுக்கு பேச்சு தர மாட்டாரா? எனக்கூறி ஓசை கொடுத்த நாயகி அம்மனை பிரார்த்திக்க சொல்கிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த குழந்தையின் தாயார் உடனே பூஜை அறைக்கு சென்று ஒரு தீபம் ஏற்றி கையில் இருந்த தங்க வளையல் ஒன்றை கழற்றி ஓசி கொடுத்த நாயகி அம்மனை நினைத்து வேண்டினார். அந்த நாளுக்கு மறுநாள் காலை அந்த குழந்தை அம்மா என்று அழைத்தவாரே அவர்களிடம் ஓடி வந்தது. இதை கண்டு குழந்தையின் பெற்றோர் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

நேற்று வரை பேசா குழந்தை இன்று அம்மன் அருளால் பேசத் தொடங்கியது என மகிழ்ந்தனர். பிறகு அம்பாளுக்கு பவுனில் தாளம் செய்து கொடுத்தனர். இன்னும் இக்கோயிலில் அத்தாலம் உள்ளது. திருமலைப்பால் விழா அன்று ஒரு நாள் மட்டும் தாளத்தை இறைவனிடம் வைத்து பூஜிக்கப்படும்.

ALSO READ | திருப்பதி பெருமாளுக்கே அண்ணனாம்..! மயிலாடுதுறையில் சிறப்பு பெற்ற கோயில் பற்றி தெரியுமா?

அக்குழந்தை பேசத் தொடங்கிய நாளில் இருந்து 3 வயது முதல் 80 வயது உடையோர் வரை சுமார் 1,800 நபருக்கு மேல் அக்கோவிலுக்கு வந்து பேசும் திறன் கிடைத்துள்ளது. பிறவி ஊமை, அதிர்ச்சியில் பேச்சு நின்றவர், திக்கி பேசுபவர்கள் என இங்கு வந்து மூலமந்திர அர்ச்சனை, வாங்குவாது நீ மூல மந்திர தர்ஷினி அர்ச்சனை வாங்குவான், மூல மந்திர ஹோமம் என மூன்று விதமான பூஜைகளில் ஏதேனும் ஒரு பூஜை செய்து அம்பாளுக்கு நெய்வேத்தியம் செய்து தரும் தேனை 45 நாட்கள் பருகி வர வேண்டும்.

பிறகு பேச்சுத் திறன் நன்றாக வந்தவுடன் கடவுளுக்கு பட்டு வஸ்திரம் உடுத்தி பிராத்தனை நிறையவே செய்வார். ஞானசம்பந்தருக்கு பொற்தாலம் வழங்கியதால் திருத்தாளமுடையார் கோவில் என பெயரும் உண்டு. இக்கோவிலின் மூர்த்தி சப்தபுரீஸ்வரர், தத்துவனிபிரதாம்பிகை ஆவர். இங்கு உள்ள தீர்த்தம் ஆனந்த சூரிய புஷ்கரணி தீர்த்தம். ஸ்தல விருக்க்ஷம் - கொன்றை மரம். ஏழாம் நூற்றாண்டு ஞானசம்பந்தர் வருவதற்கு முன் இந்த இடம் கொன்றை வனமாக இருந்தது. கொன்றை வனநாதர் உண்ணாமுலை அம்மன் என முன்பு பெயர் இருந்தது. ஞானசம்பந்தர் வருகை புரிந்த நிகழ்வுக்குப் பின் சப்தபுரீஸ்வரர் என பெயர் மாறியது. மகாலட்சுமிக்கு வரம் கொடுத்த ஸ்தலமும் இதுதான். திருமணமாகாத பெண் இங்கு வந்து ஸ்யும்ரகலா மூல மந்திர அர்ச்சனை செய்து வேண்டினால் நல்ல வரன் அமையும். சூரிய தோஷம் நிவர்த்தி ஸ்தலமாகவும் திகழ்கிறது.

விஷேசமான நாள்கள்

கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபடுவது மிகவும் விசேஷம். ஏனெனில் கார்த்திகை ஞாயிற்று சூரிய பகவானுக்கு இறைவன் காட்சியளித்த காரணமாக கார்த்திகையில் ஒவ்வொரு ஞாயிறு தீர்த்தவாரி நடைபெறும். ஞானப்பால் உண்டு வந்த முதல் கோயில் என்பதால் ஞானப்பால் உற்சவம் சீர்காழியில் நடக்கும். அன்றே இங்கு பொற்தாளம் மிகவும் விசேஷமாக நடைபெறும்.

First published:

Tags: Local News, Sirkazhi, Temple