ஹோம் /மயிலாடுதுறை /

ஒரே கோயிலில் அனைத்து வடிவ சிவபெருமான்.. சீர்காழியில் உள்ள வரலாற்று சிறப்புகள்!

ஒரே கோயிலில் அனைத்து வடிவ சிவபெருமான்.. சீர்காழியில் உள்ள வரலாற்று சிறப்புகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

சீர்காழி கோயில்கள் நிறைந்த நகரம் என்பதால் இங்கு நிறைய பிரசித்தி பெற்ற கோவில்களும், சுற்றுலாத்தலமான கோவில்களும் உள்ளன.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Sirkali (Sirkazhi), India

சீர்மிகு சீர்காழியின் வரலாற்று சிறப்புகள், காரணங்கள் குறித்த முழு விவரங்களை காணலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கியமான ஊர்களில் சீர்காழியும் ஒன்று. இதற்கு சீர்மிகு சீர்காழி என்று மற்றொரு பெயரும் உண்டு. சீர்காழி நிறைய கோவில்கள் அமைந்துள்ள நகரமாகும். தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்த சீர்காழி கடந்த 2020 டிசம்பர் 28ம் நாள் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரித்து மயிலாடுதுறை, சீர்காழி என இரு கோட்டங்களாக பிரிக்கப்பட்டன.

கோயில்கள்.

சீர்காழி, கோயில்கள் நிறைந்த நகரம் என்பதால் இங்கு நிறைய பிரசித்தி பெற்ற கோயில்களும், சுற்றுலாத்தலமான கோயில்களும் உள்ளன. இதில் சட்டநாதர் கோயில், ஓசை நாயகி கோயில், நாகேஷ்முடையார் கோயில், அங்காளம்மன் கோயில், இரட்டை காளியம்மன் கோயில் போன்ற எண்ணற்ற கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் வரலாறு புராணக்கதைப்படி, பெரு வெள்ளத்தினால் இப்பூமி அழிந்து போக இருந்த வேளையில் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தை தோணியாக அமைத்து உயிர்களை காப்பாற்றினார் எனக் கூறப்படுகின்றது.

சிவபெருமான் அனைத்து வடிவங்களும் இங்குள்ள கோவில்களில் பூஜிக்கப்படுகின்றன. சீர்காழி “தோணிபுரம்” என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஏனெனில் சிவபெருமான் தோணியில்(படகு) அனைத்து உயிர்களையும் ஏற்றிக்கொண்டு சென்று காப்பாற்றியதால் இங்குள்ள சிவபெருமான் இவ்வாறு அழைக்கப்படுகின்றார். சீர்காழியில் சிவன் கோயில்கள் அதிகம் காணப்படுவதால் சிவராத்திரி உற்சவம் அன்று அதிகளவில் மக்கள் கூடுவர்.

இங்கு உள்ள கோவிலை தரிசிப்பதற்காக உலகில் உள்ள பக்தர்கள் இங்கு வந்து வழிபடும் அளவுக்கு சீர்காழி மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் ஸ்தலமாக திகழ்கிறது.

இதையும் படிங்க | காசிக்கு இணையான தலம்.. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலுக்கு போயிருக்கீங்களா..?

பள்ளி கல்லூரிகள்:

ச.மு.இ அரசு உயர்நிலைப்பள்ளி, எல்.எம்.சி மேனிலைப்பள்ளி, பெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி, விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளி, பெஸ்ட் கலை கல்லூரி, விவேகானந்தர் கலை கல்லூரி உள்ளன.

சீர்காழியில் அரசு பள்ளி, கல்லூரிகள் குறைந்த அளவில் இருக்கும் காரணத்தினால் பெரும்பாலான மாணவ மாணவிகள் 20 கி.மீ தொலைவில் உள்ள மயிலாடுதுறையில் இருக்கும் பள்ளி கல்லூரிகளில் வந்து படிக்கின்றனர்.

போக்குவரத்துகள்:

சீர்காழியிலிருந்து தினமும் மயிலாடுதுறை, சிதம்பரம், கும்பகோணம், காரைக்கால் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி வரை இயங்கும் ரயில்கள் குறைந்த அளவிலே இயக்கப்படுகிறது. அதிலும் ஒரு சில ரயில்கள் மட்டுமே சீர்காழியில் நின்று செல்லும். இதனால் மக்கள் பெரிதும் பேருந்தில் பயணிக்கிறார்கள்.

First published:

Tags: Local News, Mayiladuthurai, Sirkazhi, Tourism