ஹோம் /மயிலாடுதுறை /

கொட்டித் தீர்த்த கனமழை.. நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை

கொட்டித் தீர்த்த கனமழை.. நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை

மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள் 

மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள் 

வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறையில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

  வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம்  பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, சீர்காழி பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு கிராமங்கள், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர். வீட்டிற்குள்ளும், வயல்வெளிகளிலும் மழை வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

  இதன்காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் செய்வதறியாது தவிக்கின்றனர். இந்த கனமழையால் பருத்தி, சம்பா நெற்பயிர்கள், கரும்பு போன்ற நெற்பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

  Also Read: ரேஷன் அட்டைக்கு ₹1000... மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்த சீர்காழி வட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

  சரியான வடிகால் இல்லாததாலும், இருக்கும் வடிகால் சரியாக பராமரிப்பு இல்லாததாலும், இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காரணத்தினாலும் இரண்டு நாள் மழைக்கே இவ்வளவு சேதமாகியுள்ளது என  விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர் - கணபதி ( மயிலாடுதுறை)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Heavy rain, Local News, Mayiladuthurai