ஹோம் /மயிலாடுதுறை /

தோட்டத்தில் செம்மரம் வளர்க்க விருப்பமா? - மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

தோட்டத்தில் செம்மரம் வளர்க்க விருப்பமா? - மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

மரக்கன்றுகள்

மரக்கன்றுகள்

Mayiladuthurai District | மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு செம்மரம் உள்ளிட்ட முக்கிய மரங்களை வளர்க்க கன்றுக் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை பெற்று பயன்பெற செய்யவேண்டிய வழிமுறைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை மாவட்டத்தில் இலவசமாக விவசாயிகளுக்கு செம்மரம் உள்ளிட்ட முக்கிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை பெற்று பயன்பெறுவதற்கு செய்யவேண்டியவை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானமும் வேலைவாய்ப்பும் கிடைக்கச் செய்வதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் (TNMSGCF)தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் விவசாயகள் குறைந்த செறிவில் விளை நிலங்களிலும், வரப்புகளிலும் மரக்கன்றுகளை நடவு செய்து பயன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, மலைவேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் குமிழ், மலைவேம்பு மற்றும் புளி உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து, சீர்காழி வேளாண்துறை உதவி இயக்குனர் ராஜராஜன் தெரிவித்துள்ளதாவது; மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண் நிலங்களில் பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தில் 2022- 23 க்கான மரக்கன்றுகள் வழங்குவதற்கு 33,000 கன்றுகள் இலக்கு பெறப்பட்டுள்ளது.

வரப்பில் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள் 160 கன்றுகள் 1 ஹெக்டர் வரப்புபரப்பிற்கு வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு2 ஹெக்டர் வரை வழங்கப்படும்.

Must Read : இளையராஜாவுடன் இணைந்த தேனி கவிஞர்... வைரமுத்து அல்ல - இவர் யார் தெரியுமா?

அதேபோல் வயல் முழுவதும் நடவு செய்வதற்கு 500 மரக்கன்றுகள் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் பரப்பிற்கு இலவசமாக வழங்கபடும். விவசாயிகள் தாங்களே உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Farmers, Local News, Mayiladuthurai