மயிலாடுதுறை கருவாடு மார்க்கெட் பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.
சந்தைகளில் பல விதமான சந்தைகள் உள்ளன.காய்கறி சந்தை, உணவு பண்டங்கள் சந்தை, கருவாட்டு சந்தை என பல ஊர்களிலும் வாரந்தோறும் சந்தை நடைபெறும்.ஆனால் கருவாட்டு சந்தை இந்தியாவில் முதன்முதலில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் ஜங்ஷன் அருகில் உள்ள சித்தர்காட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்டது கருவாட்டு சந்தை . இந்த கருவாட்டு சந்தைக்கு கருவாடுகள்இராமநாதபுரத்திலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இங்குள்ள கருவாடுகளை பல ஊர்களில் இருந்தும் கருவாட்டு சந்தைக்கு கருவாடுகள் வாங்க வருகின்றனர் என விற்பனையாளர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : சொந்த ஊரில் திறக்கப்பட்ட காவல்நிலையம்... அமைச்சர் கே.என்.நேரு நெகிழ்ச்சி
ஈரோடு, கரூர், பவானி, திருச்சி என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் இங்கிருந்து வாங்கி செல்கின்றனர். மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் என இங்கிருந்து ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்று வாரந்தோறும் மூன்று தினங்களில் வாங்கி செல்கின்றனர். இங்கு அனைத்து விதமான கருவாடுகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே இந்த கருவாட்டு சந்தைதான் முதன்முதலில் தொடங்கப்பட்டது என்பதால் இது இந்தியாவின் முதல் கருவாட்டு சந்தை என கூறப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayiladuthurai