சோழ நாற்பது திருநாங்கூர் பதினொன்னு, 108 திவ்ய தேசம். இதில் திருநாங்கூர் 11ல் மிக விசேஷமாக இருப்பது இக்கோவில். இக்கோவிலின் பெருமாள், திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்பது ஐதீகம். இக்கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.
திருப்பதி பெருமாள் தம்பி, திருநாங்கூர் பெருமாள் அண்ணன். இக்கோவில் யுகாந்திர கோவில் என வழங்கப்படும். தேவர்களால் பிரதிஷ்ட செய்த கோவில்கள் உள்ளன. அதில் இதுவும் ஒன்று. அதில் மானுஷ பிரதிஷ்ட, தேர தேவ பிரதிஷ்ட என்று இரண்டு பிரதிஷ்டங்கள் உள்ளன.
இக்கோவிலில் மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் தேவ சிற்பிகளால் கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இக்கோவிலில் புரட்டாசி மாதம் பிரமோசர்வம் விசேஷமாக நடைபெறும். பிறகு தை மாத அமாவாசை கருட உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும்.
திருநாங்கூர் கருட சேவை பெருமாள் மற்றும் திருவெங்கி ஆழ்வாரும் சேரும் உற்சவமாகும். இது நாராயண பெருமாள் கோவிலில் தை மாதத்திற்கு அடுத்த நாள் நடைபெறும். திருவெங்கி ஆழ்வார் அண்ணா என்று பாடப்பட்ட ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலை ஒரு முறை தரிசிப்பதும், தங்குவதும் திருப்பதி பெருமாளை மூன்று முறை தரிசிப்பதற்கு சமமாகும்.
புராண வரலாறு :
ராமரின் கொள்ளு தாத்தாவான நொந்து மாறன் அவரின் மகன் ஸ்வேத மகாலஜன். அந்த மகனுக்கு 9 வயதிலேயே அகால மூர்த்தி தோஷம். அதாவது பிரம்மகத்தி தோஷம் உள்ளது. மன்னர் நொந்து மாறன் என் மகனுக்கு என்ன செய்வது என்று முனிவர் வசிஷ்டரிடம் கேட்கிறார்.
அதற்கு வசிஷ்டர் அயோத்தியில் இருந்து அண்ணன் பெருமாள் கோவில் சென்று ஒரு மாத காலம் தங்கி ஐப்பசி, கார்த்திகை ஏகாதசியில் வில்ல மரத்தடியில் தவம் செய்ய வேண்டும் என கூறுகிறார். வித்தின்மந்தவம் என்று இதற்குப் பெயர். அதன்படி மன்னரும் தவத்தை மேற்கொள்கிறார்.
தவத்தின் பலனாக கௌசிகவாத சனி பெருமான் தோன்றி என்ன வரவேண்டும் என கேட்கிறார். மன்னரும் எனக்கு அருள் புரிந்தது போல் என் மகனுக்கு பிரம்மகத்தி தோஷம் விலக அருள் புரிய வேண்டும் என கூறுகிறார். கார்த்திகை மாதம் இப்பெருமாளை வணங்குவது மிகவும் சிறப்பு, நவகிரக தோஷம், பித்ரு தோஷம், சத்ரு தோஷம், மித்திண்டய தோஷம் அனைத்தும் இங்கு வந்து தரிசித்தால் நிவர்த்தி ஆகும்.
அனைத்து ஊர்களிலும் மித்திண்டய தோசம் விலக சிவ தலத்திற்கு செல்வார்கள். ஆனால் திருநாங்கூரில் 11 கோவிலில் கோவிலில் மட்டுமே மித்திண்டய தோஷம் நிவர்த்தி ஸ்தலமாக திகழ்கிறது. திருவெள்ளக்குளத்து அண்ணம் பெருமாள் கோவில் என புராணம் கூறுகிறது.
திருவேணி ஆழ்வார், தருமபத்தினி இவர் ஆழ்வார்களில் கடைசி ஆழ்வார் ஆவர். இவர் குமுதவல்லி நாச்சியாரின் அவதார ஸ்தலமாக திகழ்கிறது இக்கோவில். திருவெங்கியாழ்வார் அண்ணா என்று பாடப்பெற்ற ஸ்தலமாகும்.
அமைவிடம் :
மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் சீர்காழியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள கோவிலாகும்.
செய்தியாளர் : கணபதி - மயிலாடுதுறை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayiladuthurai