ஹோம் /மயிலாடுதுறை /

கம்பர் பிறந்த மயிலாடுதுறை தேரழுந்தூர் - வரலாறு தெரியுமா?

கம்பர் பிறந்த மயிலாடுதுறை தேரழுந்தூர் - வரலாறு தெரியுமா?

தேரழுந்தூரின் சிறப்புகளும் வரலாறும்.

தேரழுந்தூரின் சிறப்புகளும் வரலாறும்.

Mayiladuthurai News: கம்பர் பிறந்த ஊர் தேரழுந்தூரின் சிறப்புகளையும் தெரிந்துகொள்வோம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mayiladuthurai, India

  மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான ஊர் தேரழுந்தூராகும். கம்பர் பிறந்த ஊர் என்பது இந்த ஊரின் முக்கிய சிறப்பாக உள்ளது. இந்த ஊரின் பிற சிறப்புகளையும் தெரிந்துகொள்வோம்.

  தேரழுந்தூர் பெயர் காரணம்

  ஒரு மகாராஜாவுடைய தேர் அழுந்திய ஊர் என்பதால் தேரழுந்தூர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

  கம்பர் பிறந்த ஊர்

  கம்பர் பிறந்த தேரழுந்தூரில் கம்பர் மேடு என்ற இடம் உள்ளது. கம்பர் உபயோகிக்கும் மண்பாண்டங்களை உபயோகித்தப்பின் தினமும் அதை அந்த இடத்தில் உடைத்ததால் கம்பர் மேடு என்று பெயர் வந்தது. பின்னர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை என்ற இடத்திற்கு நடந்து சென்று அங்கு வாழ்ந்து கம்பர் உயிர் இழந்தார். கம்பருக்கு தேரழந்தூரில் நினைவு மண்டபமும் உள்ளது.

  புகழ்பெற்ற பெருமாள் கோவில்

  தேரழுந்தூரில் 108 திவ்யதேசங்களில் 10வது திவ்யதேசமான அருள்மிகு ஆமருவி பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி மாதம் திருவோணத்தில் நடைபெறும் தேர்விழா முக்கியமான திருவிழாவாகும். அதேபோல புரட்டாசி மாதம் நவராத்திரியில் தெப்ப உற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் 22 நாட்கள் திவ்யதேசத்தின் தனிப்பட்ட உற்சவங்களும் மக்கள் ஆதரவுடன் சிறப்பாக நடைபெறும். தை மாதம் அமாவாசை அவதாரம் உற்சவம் நடைபெறும்.

  தேரழுந்தூர் மக்களின் தொழில்

  தேரழுந்தூர் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறையில் இருப்பதால் விவசாயம்தான் இந்த ஊருடைய பிரதானமான தொழில். விவசாயிகள் வருடத்திற்கு இரு போகம் விவசாயம் செய்கிறார்கள். அதில் நெல், உளுந்து, பருத்தி போன்ற நெற்பயிர்கள் பயிர் செய்கின்றனர். விவசாயித்தை நம்பிதான் இங்கே நிறைய குடும்பங்கள் உள்ளன.

  செய்தியாளர் : கணபதி - மயிலாடுதுறை

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Local News, Mayiladuthurai