மயிலாடுதுறை மாவட்டத்தில் இறைவன் பெயர், சிவலோக சுவாமி. அம்பாலின் பெயர், சொக்கநாயகி என்கின்ற சவுந்தரநாயகி. தல விருட்சம் புங்க மரம். அதனால் தான் ஊருக்கு திருப்புங்கூர் என்ற பெயர் உள்ளது.
ஒரு காலத்தில் புங்க காடாக இருந்த இவ்வூரில் இறைவன் புற்று வடிவத்தில் தோன்றினார். மூலவர் அமைப்பு பாம்பு புற்று போல் இருக்கும். அந்தப் புற்று அபிஷேகம் செய்யும் பொழுது கரையாமல் இருக்க செப்பு குவல வடிவத்தில் கவசம் சாத்தப்பட்டது.
ஒவ்வொரு திங்கள் கிழமையும் இரவு 8 மணிக்கு அந்த கவசத்தை எடுத்து சுயம்பு தரிசனம் நடக்கும். ஜாதகத்தில் இருக்கும் ராகு, கேது பிரச்சனைகளில் திருமண தடைகள், புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த அம்பாளுக்கு அர்ச்சனை செய்தால் பலன்கள்
கிடைக்கும்.திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் மூவர்களால் பாடப் பெற்ற ஸ்தலம். ஆதனூர் என்னும் ஊரில் தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்தவர் நந்தனார். இவர் அந்தனரிடம் தினமும் விவசாய வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க : காவேரிப்பட்டினம் அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள்..! என்ன என்ன தெரியுமா?
இவர்களின் கூடுதல் தொழில் இறந்து போன மாடுகளின் தோலை உரித்து பதப்படுத்தி அருகில் உள்ள சிவாலயங்களில் மேளத்திற்கு தோல் கொடுப்பது வழக்கமாக உள்ளது.
நந்தனார் இந்த வேலையை மாதத்திற்கு ஒருமுறை வழக்கமாக செய்து வந்தார். இந்த வழக்கத்தின்போது தெய்வத்தின் மீது ஈர்ப்பு வந்து மிகவும் பற்றுக்கொண்டார்.
சிவனுக்கும் பார்வதிக்கும் அழகில் பெரியவர் யார்? என்ற பிரச்சனை வருகிறது. அழகுமேல் இவ்வளவு கர்வமா என சிவன், பார்வதி மேல் கோபம் கொள்கிறார். அதை நினைத்து கவலை கொண்ட பார்வதி பிரம்மனிடம் ஒரு தீர்வு கேட்கிறார்.
அதற்கு பிரம்மன் தன் கையில் உள்ள தர்ப்பையை பூலோகத்தில் எந்த சிவாலயத்தில் அமைதோ அங்கு 48 நாட்கள் பூஜை செய்யும் படி சொல்கிறார். அதன் பொருட்டு பார்வதி பூஜை செய்ய அங்கு ஒரு தடாகம் தேவைப்பட்டது.
தடாகத்தை உருவாக்க நந்தி தன் கொம்பினால் கீரி ஒரு தடாகத்தை ஏற்படுத்தினார். அதிலிருந்து ஜலம் எடுத்து பார்வதி பூஜித்து சிவனை வழிபட்டு கோபத்தை தனித்தார்.
இது மிகவும் பழமையான தடாகம். எனவே, இதனை தூர்வாரும் பொருட்டு நந்தனார் தன் இன மக்களை அழைக்கிறார். ஆனால் யாரும் ஒத்தாசைக்கு வராமல் அனைவரும் ஏளனம் செய்கிறார்கள்.
எனவே நந்தனார் சிவனை வேண்டி தவம் மேற்கொள்கிறார். உனக்கு தொண்டு செய்ய விரும்புகிறேன். ஆனால் என்னால் ஏதும் செய்ய இயலவில்லையே என வருந்துகிறார். இதனை கவனித்த சிவன் விநாயகரிடம் நீ சென்று உதவி செய் என்று கூற விநாயகரும் தன் பூத கரங்களால் ஒரே வெட்டில் தூர்வாரினார்.
தவம் முடித்த நந்தனார் இதனைக் கண்டு வியந்து மனமகிழ்ந்து சிவனை வேண்டினார். 4 வீதி சுற்றி வந்த நந்தனார் தாழ்த்தப்பட்ட குடியினர் என்பதால் தேரடியில் நின்றே சிவனே பிரார்த்திக்கிறார்கள்.
உன் திருமுகத்தை பார்க்க முடியவில்லை என்று வேதனைப்படுகிறார்கள். உடனே சிவன் துவாரகால மூலம் நந்திக்கு செய்தி அனுப்புகிறார்.
"நந்தனார் என்னை பார்க்கும் பொருட்டு நீ சற்றே விலகி இரும் பிள்ளாய் சன்னிதானம் மறைக்குதாம் நற்றமும் புரியும் திருநாவைபோலார்"
என கூறினார். ஆச்சரியத்தில் ஆழ்ந்த நந்தி தன் நாவை உள்ளடக்கி நின்றார். ஆதலால் இங்கு உள்ள நாவை உள்ளடக்கி இருக்கும் நந்தி நகர்ந்து நந்தனார், சிவனை வழிபட்டதால் நந்தனாருக்கு நந்தி விலகிய ஸ்தலம் என்ற பெயர் வந்தது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள திருப்புங்கூர் என்ற இடத்தில் சிவலோக சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
செய்தியாளர் : கணபதி - மயிலாடுதுறை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayiladuthurai