மத்திய இடைநிலை கல்வி வாரியம் கிளஸ்டர் -719 பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவின் கூடை பந்து போட்டிகள் டிசம்பர் 2ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்து 297 அணிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
போட்டியில் சிறப்பு விருந்தினராக சட்டப் பேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். கே.வி. ராதாகிருஷ்ணன் விவேகானந்தா மற்றும் சூட் சமாரிடன் பப்ளிக் பள்ளி குழுமங்களின் தலைவர் போட்டியை துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க : காவேரிப்பட்டினம் அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள்..! என்ன என்ன தெரியுமா?
அனிதா ராதாகிருஷ்ணன், விவேகானந்தா மற்றும் குட் சமாரிடன் குழுமங்களின் தலைவர் ஆர். பிரவின் வசந்த் ஜெபஸ், அனுஷா மேரி பிரவின், குட் சமாரிடன் பப்ளிக் பள்ளி இயக்குநர்கள், அலெக்சாண்டர் ஹெப்ளின் இசையா, ரீனிஷாஜேன் அலெக்சாண்டர், குட் சமாரிடன் மேல்நிலை பள்ளி மற்றும் கல்வியியல் கல்லூரி இயக்குநர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குட் சமாரிடன் பப்ளிக் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெ.ஆபிரகாம் ஏனோக் அனைவரையும் வரவேற்றார்.
எல்.எம்.சி பள்ளி மைதானம் - சீர்காழி மற்றும் சாய் அகாடமி, மயிலாடுதுறையில் போட்டிகள் நடைபெற்றன. அடுத்த கட்டத்திற்கு பொன் வித்யாஷ்ரம் சென்னை, பி.எஸ்.சிதம்பரம் நாடார்-விருதுநகர், செட்டிநாடு வித்யாஷ்ரம் சென்னை, டாக்டர்.ஜி.எஸ்.கல்யாணசுந்தரம்-கும்பகோணம் லாலாஜி, ஓமேகா சென்னை போன்ற அணிகள் தகுதி பெற்றன.
ஏழு போட்டிகள் எல்.எம்.சி மேல்நிலைப்பள்ளி சீர்காழியில் நடத்தப்பட்டது. அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற்ற அணிகள் வேலம்மாள் வித்யாஷ்ரம்- மேல்அயனம்பாக்கம், லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷ்னல், சென்னை, விசாகன் சீனியர் பள்ளி, மதுரை, ஷ்ரத்தா குழந்தைகள் அகாடமி சச்சிதானந்த ஜோதி நிகேதன், ஜான் பள்ளிக்கரணை, சாய் கூடைப்பந்து மைதானத்தில் 10 போட்டிகள் நடத்தப்பட்டு ஐந்து அணிகள் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பல்வேறு அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளில் ஆண்கள் பிரிவில் வேலம்மா இன்டர்நேஷனல் பள்ளி பொன்னேரி, எம்ரெலர் வெலி ஏற்காடு. பெண்கள் பிரிவில் செட்டிநாடு வித்யாஷ்ரம் சென்னை, DAV பெண்கள் கோபாலபுரம், சென்னை. இவர்களுக்கு இடையேயான கடைசி போட்டி நேற்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குட் சமாரியன் பள்ளியில் நடைபெற்றது.
மயிலாடுதுறை செய்தியாளர் : கணபதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayiladuthurai