முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / பாயாசத்தால் வெடித்த மோதல் : அடிதடி கலாட்டாவாக மாறிய திருமண நிச்சயதார்த்த விழா - வீடியோ வைரல்

பாயாசத்தால் வெடித்த மோதல் : அடிதடி கலாட்டாவாக மாறிய திருமண நிச்சயதார்த்த விழா - வீடியோ வைரல்

நிச்சயதார்த்த விழாவில் பாயாசம் கேட்டு தகராறு

நிச்சயதார்த்த விழாவில் பாயாசம் கேட்டு தகராறு

sirkali | சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசம் கேட்டு தகராறில் ஈடுப்பட்ட இரு தரப்பினரும் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .

  • 1-MIN READ
  • Last Updated :
  • Sirkali (Sirkazhi), India

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் மணமகன் வீட்டார் - பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தின் வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழி போலீசார் இது தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்கள் உணவு உட்கொண்ட பொழுது பாயாசம் பரிமாறியுள்ளனர். அப்பொழுது பாயாசம் சரியில்லாததால் அதனை பெண் வீட்டார் கேட்டு தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாகா கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கைகளைப்பாகி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது டேபிள், சேர்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

' isDesktop="true" id="1004989" youtubeid="67tQErgpll4" category="mayiladuthurai">

மேலும் படிக்க... School Reopen : தனியார் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புது அறிவிப்பு!

மண்டப வாசலிலல் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்ட வீடியோ சமூக வளைதலத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.

First published:

Tags: Marriage, Sirkazhi, Viral Video