மயிலாடுதுறை மாவட்டம் திருநன்றியூர் கிராமத்தில் மழை நீர் வடிவதற்காக கட்டப்பட்ட மழை நீர் வடிகால் சாலையில் இருந்து 3 அடிக்கு மேல் உயரத்தி கட்டப்பட்டுள்ளது. அவற்றை அகற்றக்கோரி திருநன்றியூர் கிராம மக்கள் மயிலாடுதுறை பா.ம.க மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானம் பேசினர்.
தொடர்ந்து, வரும் செவ்வாய்க்கிழமை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
இதையும் படிங்க : பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு
மழைநீர் வடிவதற்காக அமைக்கப்படும் இந்த வடிகால்கள் சாலையிலிருந்து 3 அல்லது 4 அடி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. இதனால் வீடுகள், கடைகள், கோவில்களின் வாசல் அடைப்பட்டு போகிறது. வாசலே தெரியாத அளவிற்கு இந்த வடிகால் அமைக்கப்பட்டு இருப்பதால் சிறியவர்கள், பெரியவர்கள் என வீட்டை விட்டு வெளியே வர பெரும் சிரமப்படுகின்றனர்.
கால்நடைகள் வீட்டுக்கு உள்ளும் வெளியும் கொண்டு செல்வதிலும் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. வியாபாரம் நடக்கும் கடைகளில் இந்த வடிகால் அமைப்புகளால் அவர்கள் வியாபாரம் பாதிக்கிறது.
இவ்வளவு உயர்த்தி கட்டப்பட்டதால் கடைகளுக்கு யாரும் வருவதில்லை என கவலையளிக்கின்றனர். இங்கு கோவில்கள் இருப்பதால் தேர் வருவதிலும் சிக்கல் ஏற்படுகிறது என பொதுமக்கள் பல்வேறு காரணங்கள் கூறுகின்றன.
இந்த வடிகால் இந்த ஊருக்கு தேவை இல்லை எனவும் அப்படி இந்த வடிகால் அமைக்க வேண்டும் என்றால் மூன்று நான்கு அடி குழி தோண்டி அல்லது காரைக்கால் போன்ற பகுதிகளில் இருக்கும் வடிகால் போன்று அமைப்பில் வடிகால்கள் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதிகாரிகளின் வாக்குறுதியால் பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை - சீர்காழி பிரதான சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னர் சீர்செய்யப்பட்டது.
செய்தியாளர் : கணபதி - மயிலாடுதுறை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayiladuthurai