நம்ம ஊர்களில் எவ்வளவு வசதிகள் வந்தாலும் எவ்வளவு முன்னேறினாலும் தெருக்களிலும், சாலையோரங்களிலும் வசிக்கும் ஆதரவுற்றோர்களின் நிலை மட்டும் அப்படியே தான் இருக்கிறது.
இவர்களின் பிள்ளைகளின் கல்வி, குடும்பம் என அனைத்தும் ஒரு கேள்வி குறியாகவே உள்ளது. சாலையோரம் வசிக்கும் மக்களின் நிலையை அவர்களோடு உரையாடி தெரிந்து கொள்வோம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பேரூராட்சியில் காவல் நிலையத்தின் அருகில் இந்து ஆதினத்தை சேர்ந்த பூம்பூம் மாட்டுக்கார இனத்தைச் சார்ந்த மக்கள், மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இவர்கள், செம்பனார்கோவில் காவல் நிலையம் எதிரில் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். எவ்வளவு மழை, வெயில், பனிக்காலம் என்றாலும் அதே இடத்தில் தான் அவர்களின் கூடாரங்களை சரி செய்து வாழ்ந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : சீர்காழி அருகே வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் செய்து மகிழ்ந்த உரிமையாளர்...
ஒருவேளை உணவுக்கு கூட இவர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழல்தான் இன்றும் உள்ளது. இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, நில இலவச பட்டா பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.
அதில் மூன்று, நான்கு குடும்பத்திற்கு மட்டுமே ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, நில இலவச பட்டா கிடைத்துள்ளன. மற்ற குடும்பத்திற்கு இன்று வரை எதுவும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
இவர்கள் சாலை ஓரங்களில் வசிப்பதால் அந்த வழியே செல்லும் அந்நியர்கள் இவர்களுக்கு இரவு நேரங்களில் இடையூறு தருகிறார்கள். இதனை இவர்கள் மேலிடத்தில் மனு கொடுத்தும் அதற்கு சரியான பதில் ஏதுமில்லை என்று வருந்துகிறார்கள்.
இவர்கள் சாலை ஓரத்தில் வசிப்பதால் எந்த நேரத்தில் யாருக்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்திலும், குழந்தைகள் விளையாடும்போது விபத்துகள் அபாயத்துடனேயே வாழ்கின்றனர். இப்படி வாழ்பவர்களுக்கு அருகே இருக்கும் மக்கள் உதவி செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை.
அதற்கு மாறாக இடத்தை விட்டு காலி செய்யச் சொல்லி விரட்டி அடிக்கும் நிலைதான் நிலவுகிறது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த மக்களின் தேவைகள் :
இவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடமும், பிள்ளைகளுக்கு நல்ல கல்வியும், இங்குள்ள ஆட்களுக்கு வேலைகளும் கிடைத்தால் போதும் என்ற நிலையை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கு அரசு தான் சரியான நடவடிக்கை எடுத்து தங்களுக்கும் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
செய்தியாளர் : கணபதி - மயிலாடுதுறை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayiladuthurai