முகப்பு /மயிலாடுதுறை /

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு

144 தடை உத்தரவு

144 தடை உத்தரவு

Mayiladuthurai District | மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள பட்டவர்த்தி மதகடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள பட்டவர்த்தி மதகடி பகுதியில் கடந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு தினத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஒரு சமூகத்தினர் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தியபோது மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு அதே இடத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதேபோல, அதே பகுதியில் மற்றொரு தரப்பினர் தங்களது புதிய அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று காவல் துறையில் அனுமதியும் பாதுகாப்பும் கேட்டிருந்தனர்.

இது குறித்து மயிலாடுதுறையில் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் (10.12.22) தேதி நள்ளிரவு 12 மணி வரை பட்டவர்த்தி மதகடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் செல்வி யுரேகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்தப் பகுதியில் இரண்டு நபர்களுக்கு மேல் சட்டவிரோதமாக கூடுவதும், அரசியல் கட்சிகளின் கொடிகள் பேனர்கள் வைப்பதும் தடை செய்யப்படுவதாகவும் புதிதாக படத்திற்கு யாரும் மாலை மரியாதை செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : திருப்பதிக்கு நிகராக போற்றப்படும் கோவில் - புதுக்கோட்டை மலையடிப்பட்டி குடைவரைக்கோவிலின் சிறப்புகள்!

இந்நிலையில், பட்டவர்த்தி பகுதிக்கு செல்லும் 3 முக்கிய சாலைகளில் தடுப்பு அமைத்துள்ள போலீசார், அங்கே வரும் வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர். மேலும், வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் முக்கிய சாலையான பட்டவர்த்தி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Mayiladuthurai