
உலகின் அனைத்துத் துறைகளிலும் போட்டிப்போடும் திறன் மிக்கவர்களாக தமிழர்கள் உருவெடுத்துள்ளனர். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், கலை-இலக்கியம் என எல்லா தளங்களிலும் ஏராளமான சாதனைத் தமிழர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இவர்களை அடையாளம் காண்பதும், அங்கீகரிப்பதும் அவசியமனாது. அப்போதுதான் தமிழ்த் திறமை அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து செல்லும்; புதியவர்களுக்கு உற்சாகம் பிறக்கும்.
இதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டின் முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளில் ஒன்றான ‘நியூஸ் 18 தமிழ்நாடு’, ‘மகுடம்’ என்ற விருது விழாவை நடத்தி வருகிறது. இந்தியாவின் மிகப் பிரமாண்டமான நியூஸ் நெட்வொர்க் குழுமம் நியூஸ்18-ன் ஓர் அங்கமான நியூஸ் 18 தமிழ்நாடு, மகுடம் விருது விழாவை வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
மேலும் வாசிக்க