மதுரை மாவட்டத்தை சேர்ந்த மெக்கானிக் ஸ்னேக் சகா பாம்பு பிடிப்பதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார்.
பாம்புகளை பார்த்தாலே படையும் நடுங்கும்னு சொல்லுவாங்க.. ஆனா கொடிய விஷம் கொண்ட அந்த பாம்புகள சிலர் பயமில்லாம கையில் பிடித்து கையாளுவதை பாக்குறப்ப ஹே எப்புடிடானு தான் நினைக்க தோனும். அப்படிப்பட்ட ஒருத்தரு நம்ம மதுரைல பாம்பு பிடிக்கிறதுல தில்லாலங்கடியா இருக்காருங்க.. மதுரைல ‘Snake சகா’னு சொன்னா தெரியாதவங்களே இருக்க முடியாது.. பைக் மெக்கானிக்கா வேலை பார்த்துகிட்டே இவர் பாம்புபிடிக்கும் தன்னார்வலராகவும் இருக்காரு.. மதுரை சுற்றுவட்டார பகுதிகள்ல குடியிருப்புகள்ல பாம்பு வந்திருச்சுனா Snake சகாவுக்கு தான் கால் பன்னுவாங்க.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் 15 ஆண்டுகளாக பைக் ஒர்க் க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார் ‘Snake சகா’ என்றழைக்கப்படும் சகாதேவன். வனவிலங்குகள் மீது இவருக்கு சின்ன வயசுல இருந்தே ஆர்வம் கொஞ்சம் அதிகம்.. விஷப் பாம்புகள், மயில், குரங்கு போன்றவற்றை ரெஸ்க்யூ செய்வதில் வனத்துறையினருக்கு உறுதுணையாக இருக்காரு.
குடியிருப்பு பகுதிகளுக்குள் வழிதவறி வரும் விஷப் பாம்புகளை பிடித்து அதை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று விடுகிறார். இதற்காக பணம் எதுவும் வாங்காம ஒரு சேவையாகவே செய்துட்டு இருக்காரு. இதுபோக மக்களுக்கு பாம்புகள் மீது இருக்கும் அச்சத்தை போக்கும் விதமா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூடியூபில் சேனல் தொடங்கி வீடியோக்களை பதிவிட்டுட்டும் வராரு.
10,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து பாதுகாப்பான இடங்களில் விட்டிருக்கும் சகாதேவன், வன விலங்குகளால் எத்தனையோ முறை தாக்குதலுக்கு ஆளாகி காயங்கள் அடைந்திருப்பதுடன் இரண்டு முறை மிகவும் சீரியசான நிலையில் உயிருக்கே ஆபத்தான நிலைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பியிருக்கிறார். பாம்பு பிடிப்பதில் கேரளாவில் புகழ்பெற்ற வாவா சுரேஷ் போன்று தமிழகத்தில் Snake சகா திகழ்ந்து வரும் நிலையில் தனது பாம்பு பிடிக்கும் அனுபவங்களை நம்மிடையே அவர் பகிர்ந்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உயிரையே பனயம் வைக்கும் அளவுக்கு வனவிலங்கு தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பினாலும் கூட பாம்புகள் மீதான தீராத காதலால் எவ்வித அச்சமும் இன்றி எங்கிருந்து எந்த நேரத்தில் அழைப்பு வந்தாலும் பாம்புகளுக்கு மனிதர்களால் எவ்வித தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற உணர்வினால் மீண்டும் மீண்டும் பாம்பு பிடிக்க சென்று விடுகிறார் இந்த Snake saha.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai