முகப்பு /செய்தி /மதுரை / மதுரை சித்திரை திருவிழாவில் பட்டா கத்தியுடன் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்!

மதுரை சித்திரை திருவிழாவில் பட்டா கத்தியுடன் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்!

மதுரை இளைஞர்கள்

மதுரை இளைஞர்கள்

Madurai chithirai festival | மதுரை சித்திரை திருவிழா கடந்த மாதம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இளைஞர்களின் இந்த செயலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Madurai, India

சித்திரை திருவிழாவில் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இளைஞர்கள் சிலர் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆடிக்கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி செயின், செல்போன் உள்ளிட்ட வழிப்பறி செயல்களில் இளைஞர்கள் பலர் ஈடுபட்டதாகவும், அதன் மூலம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும், சுமார் இருபது நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் திருவிழாவின் போது கோரிப்பாளையம், ஷெனாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மது போதையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆய்க்கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

ALSO READ | 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மதுரை மாவட்டத்தில் 95.84% பேர் தேர்ச்சி!

சித்திரை திருவிழா நடைபெறுவதற்கு முன்னதாகவே  குற்றப்பின்னணி உடைய நபர்களை கைது செய்ய காவல்துறை தவறியதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

First published:

Tags: Local News, Madurai, Madurai Chithirai Festival