Home /madurai /

மதுரை யானைக்கல் சுல்தான் உணவகம்.. இங்க என்ன ஸ்பெஷல்?

மதுரை யானைக்கல் சுல்தான் உணவகம்.. இங்க என்ன ஸ்பெஷல்?

மதுரை

மதுரை யானைக்கல் சுல்தான் உணவகம்

Madurai Yaanaikal Sulthan Hotel : மதுரை யானைக்கல் சுல்தான் உணவகம் 1980ல் சாலையோர கடையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று 40 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் பெயரெடுத்த உணவகமாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
மதுரையில் உணவுகளுக்கும் உணவகங்களுக்கும் பஞ்சமில்லை என்பது நாம் அனைவருமே அறிந்த ஒன்றுதான்.. அப்படிப்பட்ட மதுரையில் பல தலைமுறைகளாக இயங்கி வரும் கடைகளும் அதிகம்.

அவ்வாறு மதுரையில் பல ஆண்டுகாலமாக இயங்கி வரும் கடைகளில் ஒன்று தான் மதுரை யானைக்கல் சுல்தான் உணவகம்..  மதுரையில் உள்ள யானைக்கல் பகுதியில் இந்த உணவகம் அமைந்திருப்பதால்  ‘யானைக்கல் சுல்தான்’ என்று அழைக்கப்பட்டு நாளடைவில் அதுவே பெயராகவும் மாறிவிட்டது.

மதுரை மக்களுக்கு மிகவும் பரிட்சயமான, பிரபல உணவகங்களில் இந்த யானைக்கல் சுல்தான் உணவகமும் ஒன்று. அதிலும் குறிப்பாக இங்கு கிடைக்கும் கொத்து பரோட்டாவையு, மெஜிரா சிக்கனையும் மதுரைவாசிகள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ருசித்திருப்பர்.

தாத்தா, அப்பாவுக்கு பிறகு தற்போது இந்த கடையை மூன்றாவது தலைமுறையாக நடத்தி வருகிறார் அக்பர்.  1980ல் இவரது தாத்தாவால் மதுரை கீழமாசி வீதி சாலையோர நடைபாதையில் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட கடை இன்று மக்கள் அனைவரும் அறிந்த உணவகமாக வளர்ந்து நிற்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து இந்த கடையின் உரிமையாளர்களாகிய அக்பர் மற்றும் முகமது ஆகியோரிடம் பேசுகையில், ஆரம்ப காலத்தில் இந்த கடையை தங்கள் பாட்டனார், பிளாட்பார கடையாகவே ஆரம்பித்தார். பின்னர் மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பின் காரணமாக சிறிது சிறிதாக இந்த கடை வளர்ந்து தற்போது யானைக்கல் சுல்தான் உணவகம் ஆக மாறியுள்ளதாக கூறினர், இன்றளவும் இந்த கடையில் உணவுகள் சமைப்பதற்கு தேவையான மசாலாக்கள் உட்பட அனைத்தும் அவர்களது வீட்டில் உள்ள பெண்களே தயாரிப்பதாகவும் தெரிவித்தனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி