மதுரை என்றதும் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்தான். கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரை மாதத்தில் நடைபெறும் மாபெரும் சித்திரைத் திருவிழா. இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி வைகை ஆற்றில் எழுந்தொருளுதல் நிகழ்வு முதற்கொண்டு நகர் எதிர்சேவை வரைக்கும் ஒட்டுமொத்த மதுரையே களைக்கட்டும். இந்த திருவிழாவை காண்பதற்கு என மதுரை மக்களும் மதுரையைச் சுற்றியுள்ள மக்களும் கூடுவார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா சித்திரை மாதத்தின் பத்தாவது நாளான ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. இந்த நிகழ்வை ஒட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் மீனாட்சி அம்மன் கோவிலின் அம்மன் சன்னதியில் இருந்து கருட வாகனம் சிம்மவாகனம் அன்ன வாகனம் மயில்வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்மனும் சித்திரை வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பர்.
சுவாமியையும் அம்மனையும் காண, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சித்திரை வீதிகளில் கூடுவார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதினால், கோவிலின் சார்பாக பக்தர்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்கக்கூடிய வகையில்நான்கு சித்திரை வீதி முழுவதும் மேற்கூரைகள் அமைக்கப்படுகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதன்படி, இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நான்கு சித்திரை வீதிகளிலும் மேற்கூரை அமைக்கும் பணிகள் தற்பொழுது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.சித்திரை திருவிழாவிற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கக்கூடிய நிலையில் சித்திரைத் திருவிழாவிற்காக மதுரை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai