முகப்பு /மதுரை /

மதுரை கருங்காலக்குடி - சிங்கம்புணரி சாலை இரு வழிப்பாதையாக மாறுகிறதா?

மதுரை கருங்காலக்குடி - சிங்கம்புணரி சாலை இரு வழிப்பாதையாக மாறுகிறதா?

கருங்காலக்குடி - சிங்கப்புணரி சாலை (மாதிரி படம்)

கருங்காலக்குடி - சிங்கப்புணரி சாலை (மாதிரி படம்)

Madurai District News | மதுரை மாவட்டம் கருங்காலக்குடி-சிங்கம்புணரி சாலை விரைவில் இரு வழிப்பாதையாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்திருக்கிறது கருங்காலக்குடி. இந்த பகுதியில் இருந்து 18 சுக்காம்பட்டி வழியாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு செல்லும் சாலை உள்ளது இந்த சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டுமென்று ஐக்கிய முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பக்ருதீன் அலி அகமத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.

இந்த மனு நெடுஞ்சாலைத்துறை பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில்,நெடுஞ்சாலை துறையினர் மேலூர் பகுதி உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கருங்காலக்குடி பேட்டையில் இருந்து சிங்கம்புணரி வரை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளீர்கள் அது பரிசீனையில் உள்ளது.

மேலும், அதை 18 சுக்காம்பட்டி வரை மதுரை மாவட்டம் அதற்கு அடுத்த பகுதி சிவகங்கை மாவட்டமாகும் எனவே கருங்காலக்குடி பேட்டையில் இருந்து 18 சுக்காம்பட்டி வரை அதனை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2023-2024 திட்டத்தில் சேர்த்து அரசுக்கு பிரேணைஅனுப்பப்படும் என தங்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, மேற்கண்ட சாலை விரைவில்இருவழிச் சாலையாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Local News, Madurai