முகப்பு /மதுரை /

பைக்கில் பெட்ரோல் டேங்கை ஃபுல் செய்பவரா நீங்கள்? வெயில் காலம் வருது.. இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

பைக்கில் பெட்ரோல் டேங்கை ஃபுல் செய்பவரா நீங்கள்? வெயில் காலம் வருது.. இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

X
பெட்ரோல்

பெட்ரோல்

Petrol tank Usage | பெட்ரோல் டேங்க்கை முழுவதும் நிரப்பினால் வெப்பநிலை அதிகரிக்கும் போது பெட்ரோல் டேங்க் வெடிக்க நேரும் அபாயம் உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

பனிக்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. இனி வரும் நாட்கள் எல்லாம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் நாம் எல்லோரும் பொதுவாக வண்டியில் இருக்கும் பெட்ரோல் டேங்க்கை நிரப்பி வைத்திருந்தால் நாம் வெளியே சென்று வர ஏதுவாகவும் அடிக்கடி பெட்ரோல் போட வேண்டிய அவசியம் இருக்காது என்று பெட்ரோல் டேங்க்கை நிரப்பி வைத்திருப்போம்.

இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது வண்டியின் பெட்ரோல் டேங்க்கை முழுவதும் நிரப்பாதீர்கள் அப்படி நிரப்பும் போது பெட்ரோல் டேங்க் வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பெட்ரோல் டேங்கில் காற்று உள்ளே வருவதற்கு இடம் கொடுக்கவும் என்றும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பெட்ரோல் டேங்கை திறந்து மூட வேண்டும் இதனால்பெட்ரோல் டேங்கில் உருவாகும் வாயு வெளியேற முடியும்” என்றஅந்த சமூக வலைதள செய்தி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த செய்தி உண்மையா இல்லையா என்று பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கேட்ட பொழுது,”ஆம் உண்மை தான். கார் மற்றும் பைக் எதுவாக இருந்தாலும் வண்டியின் பெட்ரோல் டேங்க்கை முழுவதும் நிரப்பாதீர்கள் அப்படி நிரப்பினால் கண்டிப்பாக வெயிலின் தாக்கத்தினால் பெட்ரோல் டேங்கில் வாயு உருவாகும். அதனால்வெப்பநிலைஅதிகரிக்கும் போது பெட்ரோல் டேங்க் வெடிக்க நேரிடும். எனவே காற்று புகும் அளவிற்கு பெட்ரோல் டேங்க்கை நிரப்பினால் மட்டும் போதுமானது என்று கூறினார்.

First published:

Tags: Local News, Madurai, Petrol