Home /madurai /

விவசாயிகளுக்கான பிரதமர் நிதி பெற இதை கட்டாயம் செய்ய வேண்டும் - மதுரை விவசாயிகளுக்கு அறிவுரை

விவசாயிகளுக்கான பிரதமர் நிதி பெற இதை கட்டாயம் செய்ய வேண்டும் - மதுரை விவசாயிகளுக்கு அறிவுரை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பிரதமரின் கிசான் சம்மன் நிதியுதவி பெறும் விவசாயிகள் கட்டாயமாக செய்ய வேண்டியவை குறித்து மதுரை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் விவசாயிகளுக்கு விடுத்துள்ள அறிவுரை அறிவிப்பில், மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக இந்த விவசாயிகளின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்கள் பகுதியில் அஞ்சல் சேவை வழங்கும் தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்த பிறகு, https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற பிரதம மந்திரியின் கிஷான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

இதற்காக மதுரை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களையும் பயன்படுத்தி ஆதாரில் செல்போன் எண்ணை இணைத்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி