ஹோம் /மதுரை /

விவசாயம், குடிநீருக்காக வைகையில் தண்ணீர் திறப்பு - மதுரை மக்கள் மகிழ்ச்சி

விவசாயம், குடிநீருக்காக வைகையில் தண்ணீர் திறப்பு - மதுரை மக்கள் மகிழ்ச்சி

மதுரை

மதுரை

Water Opening In Vaigai For Agriculture | தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து  விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட  மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Theni

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 71 அடி உயரம் கொண்ட அணையில் தொடர் மழை காரணமாக 70 அடிக்கு மேல் நீடித்தது.

இதையும் படிங்க ; மதுரை மீனாட்சியம்மன் கோவில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது!

இந்நிலையில், மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக உள்ளது. அணைக்கு 1390 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2069 கன அடி நீர் திறக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் உள்ள 2284.86 ஏக்கர் விவசாய நிலங்கள் 58 கிராம கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகிறது.

வைகை அணை அருகே உள்ள இந்த கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து இன்று முதல் 150 கன அடி வீதம் மொத்தம் 300 மி. கன அடி தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அரசு கூடுதல் செயலர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க ;  தேனி மாவட்டத்தின் இந்த கிராமங்களில் நாளை மின் விநியோகம் ரத்து..!!

அதன்படி காலை 11 மணி அளவில் கலெக்டர்கள் முரளிதரன் (தேனி), அனீஸ்சேகர் (மதுரை) ஆகியோர் 58 கிராம கால்வாயில் தண்ணீரை திறந்து வைத்தனர். இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.10 அடியாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

449 கன அடி நீர் வருகிறது. 1644 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.14 அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai, Theni