முகப்பு /மதுரை /

மதுரை-திருமங்கலம் இடையே பிப்ரவரி 13-ல் ரயில் சோதனை ஓட்டம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மதுரை-திருமங்கலம் இடையே பிப்ரவரி 13-ல் ரயில் சோதனை ஓட்டம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மதுரை திருமங்கலம் ரயில் பாதை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக

மதுரை திருமங்கலம் ரயில் பாதை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக

Madurai Thirumangalam Train line : சோதனை ஓட்டத்தின்போது பொதுமக்கள் ரயில் பாதையை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மற்றும் திருமங்கலம் இடையே பிப்ரவரி 13-ல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை திருமங்கலம் இடையே 17.32 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் பெங்களூர் தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் நாளை மறுநாள் பிப்ரவரி 13 அன்று ஆய்வு செய்ய உள்ளார்.

மதுரை திருமங்கலம் இடையே காலை 9:30 மணி முதல் மதியம் 2 மணி வரை மோட்டார் ட்ராலி மூலம் ஆய்வு நடைபெறும் மாலை 3 மணி முதல் 6:00 மணி வரை திருமங்கலம் மதுரை இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது சோதனை ஓட்டம் நடைபெறும் போது ரயில் பாதை அருகே வசிப்போர் புதிய ரயில் பாதையை நெருங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிப்ரவரி 14 இல் இப்புதிய பாதையில் செய்யப்பட்டுள்ள மின்மயாக்கள் ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே. சித்தார்த்த ஆய்வு செய்ய உள்ளார்.

சிறப்பு ஆய்வு ரயில் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆய்வு நடைபெறும் ஆய்வுக்குப் பின் புதிய இரட்டை ரயில் பாதை மின்தடத்தில் 25 ஆயிரம் வேரல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சிறப்பு ஆய்வு ரயில் இயக்கி சோதனை செய்யப்படவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே ஆய்வு நடைபெறும் அந்த இரண்டு நாட்களில் மதுரை மற்றும் திருமங்கலம் இடையே உள்ள ரயில் பாதையில் ஆய்வு நடைபெற உள்ளதால் பொதுமக்கள் இப்பகுதிக்கு நெருங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Southern railway