Home /madurai /

நேரம் சரியில்லையா... சனி திசை நடக்கிறதா? - நல்வழி பிறக்க மதுரை விநாயக கோரக்கரை வழிபடுங்கள்!

நேரம் சரியில்லையா... சனி திசை நடக்கிறதா? - நல்வழி பிறக்க மதுரை விநாயக கோரக்கரை வழிபடுங்கள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரைக்கு அருகே திருப்புவனம் கோட்டையில் அருள்பாலிக்கும் விநாயக கோரக்கரை வழிபட்டால் நேரம் சரியில்லாதகவர்களுக்கும் சனிதோஷம் இருப்பவர்களுக்கும் நல்லவழி பிறக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    சிவ பெருமானின் அருள் பெற்ற சித்தராக வழ்ந்தவர் கோரக்கர் என்று சொல்லப்படுகிறது, இவர் சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பயணம் செய்து நிறைவாக தமிழகம் வந்து நாகப்பட்டினத்துக்கு அருகே வடக்குப் பொய்கை நல்லூரில் ஜீவ சமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

    திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகே உள்ள அத்ரி மலையில் கோரக்கருக்காக அத்ரி மாமுனி வரவழைத்த கங்கை, கடனாநதி என்ற பெயரில் இன்னமும் ஓடிக் கொண்டிருப்பதாகவும், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அந்த நீரால் அபிஷேகம் செய்து, பூஜைகளை கோரக்கர் மேற்கொண்டார் என்றும் அதுவே கோரக்கநாதர் என்று வழங்கப்படுவதாக கூறுகின்றனர். இப்படியாக சென்ற இடங்கள் பேர்பெற்ற அந்த சித்தர், மதுரை அருகிலும் விநாயக கோரக்கராக விளங்குவதாக நம்பப்படுகிறது.

    விநாயக கோரக்கர்

    அதன்படி, மதுரையை அடுத்துள்ள திருப்புவனத்தில் கோரக்கர், மூலக் கடவுளான விநாயகர் ரூபத்திலேயே காட்சி அளிக்கிறார். இங்கே கோயில் கொண்டிருக்கும் கோரக்கர் கிழக்கு நோக்கி இருக்கிறார். கோரக்கருடன் உடன் வந்த பட்டாணி (ராவுத்தர்) சுவாமி, புளியமர மேடை மீது அமர்ந்திருக்கிறார். வலது, இடது பக்கங்களில் மண்டபங்கள் அமைந்துள்ளன. மடப்பள்ளி, முடி இறக்கும் பிரார்த்தனை நிறைவேற்றும் இடம், நீராடுமிடும் என்று தனித்தனியே மண்டபங்கள் இங்கே இருக்கின்றன. விநாயக கோரக்கருக்கு தினமும் காலை 8 மணிக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    சர்க்கரைப் பொங்கல், சுண்டக்கடலை பிரசாதம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, மற்றும் பிற விநாயகருக்கான எல்லா விசேஷ நாட்களிலும் இங்கே விநாயக கோரக்கரை வழிபட பத்தர்கள் அலைமோதுகின்றனர். பௌர்ணமி தினங்களில் இங்கே திருவிழா கொண்டாட்டமாக இருக்கும்.

    குறைகள் நீங்கும்

    எலும்பு பாதிப்பு இருப்பவர்கள், படிப்பில் போதிய நாட்டம் இல்லாதவர்கள், பிள்ளைப்பேறு இல்லாதோர், நேரம் சரியில்லாதவர்கள், தம் ஜாதகத்தில் சனிதோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து, இந்த விநாயக கோரக்கரை வணங்கினால் தம் குறைகள் நீங்கப் பெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது. மதுரையில் இருந்து மானாமதுரை வழித்தடத்தில் சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருப்புவனம். இங்குள்ள திருப்புவனம் கோட்டை என்ற இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் இந்த விநாயக கோரக்கர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி