முகப்பு /செய்தி /மதுரை / மதுரை சிறைக்கு 1,000 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கிய விஜய் சேதுபதி... குவியும் பாராட்டு...!

மதுரை சிறைக்கு 1,000 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கிய விஜய் சேதுபதி... குவியும் பாராட்டு...!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

Vijay Sedhupathi Gift Books | மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி ஆயிரம் நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்.

  • Last Updated :
  • Madurai, India

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில், கைதிகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் தன்னம்பிக்கை பெறுவதற்காக சிறை நூலக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் திருப்பூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளில் இதற்கென தனி அரங்கு அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான புத்தங்கள் நன்கொடையாக பெறப்பட்டன.

இதனிடையே, மதுரை மத்திய சிறை கைதிகளுக்காக நவீன நூலகம் அமைக்கப்படவுள்ளது. இந்த நூலகத்திற்காக சுமார் 1 லட்சம் புத்தகங்கள் சேகரிக்கும் நோக்கில், தனிநபர்கள், அமைப்புகள் மூலமாக நன்கொடையாக புத்தகங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேலான புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த நிலையில், படப்பிடிப்பிற்காக மதுரை உசிலம்பட்டி சென்றிருந்த நடிகர் விஜய்சேதுபதி, இத்திட்டம் குறித்து அறிந்தார் அதனைத் தொடர்ந்து, ஆயிரம் புத்தகங்களை நேரடியாகச் சென்று அன்பளிப்பாக வழங்கினார். விஜய் சேதுபதியிடம் இருந்து புத்தங்களை, சிறைத்துறை துணைத் தலைவர் பழனி பெற்றுக்கொண்டார்.

First published:

Tags: Actor Vijay Sethupathi