முகப்பு /மதுரை /

மீன் பிரியர்களா நீங்கள்? வெரைட்டியான மீன் சாப்பிட மதுரையில் சூப்பர் ஸ்பாட்!

மீன் பிரியர்களா நீங்கள்? வெரைட்டியான மீன் சாப்பிட மதுரையில் சூப்பர் ஸ்பாட்!

X
மீன்

மீன் கடை

Madurai Famous Foods | மதுரை மினி பீச் என்று சொல்லக்கூடிய மாரியம்மன் தெப்பக்குளத்தில் நெத்திலி, கனவா, இறால், நெய் மீன் போன்ற வெரைட்டியான சீஃபுட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

சென்னை மெரினா பீச் முழுவதும் ஃபிஷ் ஃப்ரை கடைகள் இருப்பது போன்று தற்போதுநம்ம மதுரை மாநகரில் உள்ள மினி பீச்சில் சுவையான ஃபிஷ் ஃப்ரை கடை வந்துவிட்டது.

மதுரையில மினி பீச்சா? ஃபிஷ் ஃப்ரை ஆ அப்படி தானே கேக்குறீங்க? ஆமாங்க...மதுரையில் ஒருமினி பீச் என்று சொல்லக்கூடிய வகையில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் விளங்குகிறது. தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரைமாலை நேரங்களில் பொழுதை கழிக்க வருகின்றனர்.

பொழுதை போக்கும்போதேவித விதமான உணவுகளை சாப்பிடும் வகையில் ஜூஸ் கடை, ஜிகர்தண்டா, பானி பூரி, சாட் வகைகள் என பல வகையான உணவுகள் கிடைக்கக்கூடிய கடைகள் மாலை நேரங்களில் செயல்பட்டு வருகின்றன.

இவற்றினுள் ‘கடல் விருந்து’ என்கிற ஒரு கடையும் ஒன்றாகும். முழுக்க முழுக்க மீன் வகைகள் ஃபிரையாக இங்கு கிடைக்கின்றன.

இறால், திருக்கை, கனவாய்,நெய் மீன், நெத்திலி, சீலா, பாறை,வஞ்சிரம், கட்லா, கடல் கெளுத்தி, கண்மாய்கெளுத்தி என பலவகையான மீன்கள்ராமேஸ்வரம், தொண்டி போன்ற கடல் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஃபிரை செய்து தரப்படுகிறது. இந்தக் கடையில் விற்பனை செய்யப்படும் கடல் உணவுகள் அனைத்தும் 25 ரூபாய் முதல் 100 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

100 கிராம் கட்லா ரூ.30,பாறை 50 ரூபாய்,நெத்திலி 100 கிராம் 70 ரூபாய், வஞ்சிரம் 100 கிராம் 150 ரூபாய் என ரகங்களுக்கு தகுந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சிக்கன் 65 போன்ற சிக்கன் உணவுகள்விற்பனை கடைகள் தெருவுக்கு தெரு முளைத்துவிட்ட நிலையில், தெப்பக்குளத்தில் பல வகையான மீன் உணவுகள் கிடைக்கும் இந்த கடைக்கு பொதுமக்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது.

First published:

Tags: Fish, Food, Local News, Madurai