Home /madurai /

மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலின் சிறப்புகள்.. மகத்துவம் வாய்ந்த அம்மன் தீர்த்தம்..

மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலின் சிறப்புகள்.. மகத்துவம் வாய்ந்த அம்மன் தீர்த்தம்..

மதுரை

மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்..

Madurai Teppakulam Mariamman Temple | மதுரை தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயில் பெண் பக்தர்களின் பெரும் நம்பிக்கைக்குரிய கோயிலாக விளங்குகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் என்ற திருப்பெயரைக் கேட்டதுமே மதுரைவாழ் பக்தர்களுக்கு அப்படியொரு சிலிர்ப்பும் பரவசமும் ஏற்படும். அந்த அளவிற்கு அவர்களது மனதில் குடிகொண்டிருக்கும் தெய்வம் தான் இந்த வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன்.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட மதுரையின் மிகப்பெரிய தெப்பக்குளம் அம்மன்னரின் பெயரில் அழைக்கப்படாமல் மாரியம்மன் பெயரில் ‘மாரியம்மன் தெப்பக்குளம்’ என்றே பிரசித்திப் பெற்றிருக்கிறது.

கோயிலின் வரலாறு:

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் கூன்பாண்டியன் ஆட்சி காலத்தில் குறும்பர்கள் எனும் இனத்தவர்கள் மதுரை மக்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, அப்பகுதி மக்களுக்குப் பெரும் தொந்தரவு கொடுத்து அட்டகாசம் செய்து வந்துள்ளனர். இதுபற்றிய புகார் மன்னர் கூன்பாண்டியன் கவனத்துக்குச் சென்றுள்ளது.

இதையும் படிங்க:  பாண்டிய மன்னனை மன்னிப்பு கேட்க வைத்த மாணிக்கவாசகர்- திருவாதவூர் கோவில் வரலாறு தெரியுமா?

மக்களைக் காப்பாற்ற அப்பகுதிக்கு படையுடன் சென்ற மன்னர், ஆக்கிரமிப்பு செய்த குறும்பர் இனத்தவருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டி அடித்துள்ளார். அதன் வெற்றியைத் தொடர்ந்து அங்கிருந்த வைகை ஆற்றில் கிடைத்த அம்மனின் சிலையை வைகை ஆற்றின் தெற்குக் கரையில் வைத்து வழிபட்டுள்ளார். அதிலிருந்து போருக்குச் செல்லும்முன் அம்மனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வாறு மன்னர் கூன் பாண்டியன் வழிபாடு நடத்திய அந்த கோயில் தான் இன்று தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலாக நிற்கின்றது.

இதையும் படிங்க:  மதுரை திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் வரலாறும் சிறப்புகளும்..

சிறப்புகள்

இந்த மாரியம்மன் கோயிலில் தீர்த்தப் பிரசாதம் மிகவும் விசேஷமானது அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் இந்தத் தீர்த்தம், கோயில் நிர்வாகத்தினரால் பித்தளை அல்லது செம்புப் பாத்திரங்களில் சேகரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
கண் நோய், அம்மை நோய், தோல் நோய் மற்றும் நாள்பட்ட வியாதி உள்ளவர்களுக்கு இந்தத் தீர்த்தம், பிணிகள் தீர்க்கும் மருந்தாகத் திகழ்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தப் பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இந்த கோயிலில் வழிபடும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டி சென்றால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் பெண்களின் நம்பிக்கையாக உள்ளது
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி