முகப்பு /மதுரை /

500 கிலோ எடையை அசால்டாக சுமக்கும் வஜ்ரா இ-பைக்... மதுரைல இங்க மட்டும் தான் கிடைக்கும்..!

500 கிலோ எடையை அசால்டாக சுமக்கும் வஜ்ரா இ-பைக்... மதுரைல இங்க மட்டும் தான் கிடைக்கும்..!

X
வஜ்ரா

வஜ்ரா இ-பைக்

Madurai District News | வியாபாரம் செய்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இ-பைக் மதுரையில் விற்பனைக்கு வந்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மார்க்கெட்டிங் வேலை செய்வதற்கும்,சிறு குறு தொழில் செய்வோரும், இந்த பைக்கில் சுமார் 500 கிலோ எடை வரை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 7 மணி நேரம் சார்ஜ் செய்து விட்டால் 80 கிலோ மீட்டர் வரை போகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது. ப்ளூடூத் கனெக்ட் செய்து கொள்ளும் வகையிலும், மார்க்கெட்டில் மேடு பள்ளங்கள் நிறைந்த இடத்தில் பைக்கை நிறுத்தி விட்டால் இழுப்பதற்கு சிரமம் இல்லாமல் ரிவர்ஸ் எடுக்கும் அம்சமும் இதில் உள்ளது.

பைக்கில் உள்ள எடைக்கு ஏற்றவாறு இருபுறங்களிலும் ஸ்டாண்ட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த வண்டியில் ஜிபிஎஸ் வசதியும் செய்து கொள்ளலாம். வண்டி திருடுபோனால் அதனை விரைவாகவும் எளிதிலும் கண்டுபிடிக்கும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. முன்புறம் எல்.இ.டி விளக்குகளும் டபுள் ஹாரன் சிஸ்டமும இந்த பைக்கின் தனி சிறப்பாகும். அதேபோல வண்டியின் சக்கரம் உறுதியாக இருக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வியாபாரம் செய்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்கு பயன்படும் வகையில் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டு மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ள ‘வஜ்ரா’ என்ற இந்த இ பைக் மதுரையில் ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள தாமரை மோட்டார்ஸ் கம்பெனியில் விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பைக்கின் விலை ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த இ-பைக் இஎம்ஐ வசதி இருப்பதாகவும், இந்தபைக் திருடி போனாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ பணம் திருப்பி தரப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்த வண்டிக்கு லைசென்ஸ் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பாகும்.

First published:

Tags: Automobile, Local News, Madurai