முகப்பு /மதுரை /

வைகை ஆற்றுக்கு வந்த அவலநிலை.. துர்நாற்றத்தால் அவதிப்படும் மதுரை மக்கள்..

வைகை ஆற்றுக்கு வந்த அவலநிலை.. துர்நாற்றத்தால் அவதிப்படும் மதுரை மக்கள்..

X
வைகை

வைகை ஆற்றுக்கு வந்த அவலநிலை

Madurai Vaigai River : மதுரை ஏ.பி பாலம் அடிப்பகுதியில் உள்ள வைகை ஆறு முழுவதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து கழிவு நீரால் துர்நாற்றம் வீசி வருகிறது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை ஏவி பாலம் அதாவது ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அடிப்பகுதி முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் இருக்கிறது.

மதுரையின் மிகவும் சிறப்பு பெற்ற மற்றும் முக்கியமான இடங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய மதுரை வைகை ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதற்காக வைகை அணையில் இருந்து வைகை ஆற்றிருக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ள மதுரை வைகை ஆறு

அந்த வகையில் இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவிற்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வைகை ஆற்றுப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் அதாவது ஆழ்வார்புரம் மதிச்சியம் செல்லூர் தத்தனேரி அருள்தாஸ்புரம் போன்ற பகுதிகள் மற்றும் மருத்துவமனையில் இருந்து வரும் கழிவு நீரானது வைகை ஆற்றில் கலந்து தற்போது ஆறு முழுவதும் ஆகாயத்தாமரையாய் வளர்ந்துள்ளது.

ஆற்று நீருடன் கழிவு நீரும் கலந்திருப்பதால் ஏவி பாலம் அடிப்பகுதி முழுவதும் ஆகாயத்தாமரைகள் வேகமாக வளர்ந்து ஆறு முழுவதும் படர்ந்து உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏவிபாலம் அடிப்பகுதி பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்ட நிலையில் தற்போது அப்பகுதி முழுவதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துக் கழிவு நீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதுபோக ஆற்றுடன் கழிவு நீர் கலக்காத வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்த நிலையில் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆறு முழுவதும் துர்நாற்றம் வீசி ஆகாயத்தாமரைகள் அதிகமாக படர்ந்து உள்ளதால் இதனை உடனே சரி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கும் மற்றும் மாநகராட்சிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Madurai