Home /madurai /

Madurai latest news | வைகை ஆற்றின் வடகரை, தென்கரையில் தூய்மை பணி- வாகன ஓட்டிகளுக்கு கிடைத்த விடிவு

Madurai latest news | வைகை ஆற்றின் வடகரை, தென்கரையில் தூய்மை பணி- வாகன ஓட்டிகளுக்கு கிடைத்த விடிவு

வைகைக் கரை சாலை

வைகைக் கரை சாலை

Madurai local news | மதுரை மாநகராட்சி சார்பில் வைகை வடகரை மற்றும் தென்கரை பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மாநகரின் பல சாலைகள் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாகவும், சாலை முழுவதும் மணல் சூழ்ந்தும் காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் செல்லும் பிறருக்கும் இது பெரிதும் எரிச்சல் ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வருகிறது. சாலையின் இரு ஓரங்களிலும் இருக்கும் மணல் பரப்பு ஏதேனும் பெரிய வாகனம் சாலையில் செல்லும் பொழுது அதன் அதிர்வு காரணமாக புழுதி காற்றாக வீசுகிறது.

இந்த பிரச்னை குறித்து பல நாட்களாக மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் எட்டப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரை இரு கரை ஓரங்களிலும் இரு வழி சாலை அமைக்கப்பட்டது. இவ்வாறு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு ஓராண்டு கூட முடிவடையாத நிலையில் அந்த தென்கரையில் உள்ள சாலைகள் அனைத்திலும் மணல் சூழ தொடங்கியது. இவ்வாறு ஊர் முழுவதும் இந்த பிரச்னை கையோங்கிய நிலையில் இந்த குறைகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தற்போது தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தூய்மை செய்யப்பட்ட சாலை


அதன்படி மாநகர பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பொதுமக்கள் பங்கேற்புடன் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.

அரசின் உத்தரவிற்கு இணங்க மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆழ்வார்புரம், வைகை வடகரை, குருவிக்காரன் சாலை பாலம் மற்றும் அடானை சுற்றியுள்ள பகுதிகளான தத்தனேரி, மேல அன்னாத்தோப்பு, பேச்சியம்மன் படித்துறை, கல்பாலம், செல்லூர், இஸ்மாயீல் புரம், சந்தைபேட்டை ஆகிய இடங்களில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி