ஹோம் /மதுரை /

மதுரையில் போக்குவரத்து மாற்றம் - எந்த வழித்தடத்தைப் பயன்படுத்துவது?

மதுரையில் போக்குவரத்து மாற்றம் - எந்த வழித்தடத்தைப் பயன்படுத்துவது?

மதுரை போக்குவரத்து மாற்றம்

மதுரை போக்குவரத்து மாற்றம்

Madurai District | மதுரைக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வருகை தர இருப்பதால், மதுரையில் இரண்டு நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரைக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் வருகை தர இருப்பதால், மதுரையில் இரண்டு நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில், காந்தி கிராம பல்கலைக்கழத்தில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இதற்காக, பிரதமர், மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு சாலை மார்க்கமாக செல்ல இருப்பதால், அது தொடர்பான பாதுகாப்பு முன்னோட்டம் நிகழ்வு இன்று நடக்க இருக்கிறது. இதையொட்டி இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், மற்றும் நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பிற மாவட்டங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை மாநகரில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு மதுரையில் இருந்து அலங்காநல்லூர், பாலமேடு, ராஜாக்கால்பட்டி, முளையூர், நரசிங்கபுரம் வழியாக திண்டுக்கல் செல்லவேண்டும். அல்லது, மதுரையில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக அலங்காநல்லூர் கேட்டுக்கடை, எம்.சத்திரப்பட்டி, நத்தம், வழியாக திண்டுக்கல் செல்லவேண்டும்.

மதுரை மாநகரில் இருந்து தேனி செல்வதற்கு பாத்திமா கல்லூரி வழியாக பரவை, சமயநல்லூர் (நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ்), தேனூர் ரோடு மேலக்கால், செக்கானூரணி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக தேனி செல்லவேண்டும்.

ராஜபாளையத்தில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு தே.கல்லுப்பட்டி சந்திப்பில் இருந்து பேரையூர், சேடப்பட்டி, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, செம்பட்டி வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும்.

ராஜபாளையம் ராஜபாளையத்தில் இருந்து மதுரை மாநகருக்கு செல்வதற்கு கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியாபட்டி, ஆவியூர், பாரப்பத்தி, எலியார்பத்தி டோல்கேட், வலையங்குளம் சந்திப்பு, சோளாங்குருணி சந்திப்பு, விராதனூர், சிந்தாமணி டோல் கேட் வழியாக மதுரை மாநகருக்குள் செல்ல வேண்டும்.

திருச்சியில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு செல்வதற்கு ராமநாதபுரம் ரிங்ரோடு சந்திப்பில் இருந்து திருப்புவனம், அல்லிநகரம் சந்திப்பு, புல்வாய்கரை சந்திப்பு, தொட்டியங்குளம் சந்திப்பு, திம்மாபுரம், முஸ்டக்குறிச்சி, மீனாட்சிபுரம், காரியாபட்டி வழியாக நெல்லை செல்ல வேண்டும்.

நெல்லையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியாபட்டி, எலியார்பத்தி டோல்கேட், வலையங்குளம் சந்திப்பு, சிந்தாமணி மற்றும் மதுரை மாநகர் பகுதியில் உள்ள டோல் கேட் வழியாக செல்லவேண்டும்.

விருதுநகரில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியாபட்டி, எலியார்பத்தி டோல்கேட், வலையங்குளம் சந்திப்பு, சிந்தாமணி மற்றும் மதுரை நகர் பகுதியில் உள்ள டோல் கேட் வழியாக செல்லவேண்டும்.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

நெல்லை மற்றும் விருதுநகரில் இருந்து திண்டுக்கல் மற்றும் பழனி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் தே.கல்லுப்பட்டி, பேரையூர் சந்திப்பு, உசிலம்பட்டி சந்திப்பு, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும்.

அல்லது, கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, உசிலம்பட்டி சந்திப்பு, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும். மதுரை நகர் பகுதியில் இருந்து திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், கொடைக்கானல் மற்றும் கோவை செல்லும் வாகனங்கள் மதுரையில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக பரவை, சமயநல்லூர், தேனூர், சோழவந்தான், கரப்பட்டி, பள்ளப்பட்டி, நிலக்கோட்டை மற்றும் செம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விருதுநகர், நெல்லை, செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல் மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் திருமங்கலம், உசிலம்பட்டி ரோடு சந்திப்பில் இருந்து சிந்துப்பட்டி, தி.விலக்கு, உசிலம்பட்டி வழியாக செல்லவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரையில், டிரோன் கேமராக்கள் பறக்கவிடவும், விமான நிலையங்களின் அருகே வாணவேடிக்கை நிகழ்த்தவும், புகை வரும் பொருள்களை பற்ற வைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Narendra Modi, Traffic