ஹோம் /மதுரை /

மதுரை தெற்கு மாரட் வீதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு... தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்...

மதுரை தெற்கு மாரட் வீதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு... தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்...

பாதாள சாக்கடையில் அடைப்பு

பாதாள சாக்கடையில் அடைப்பு

Madurai | மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடை அடைத்து பல நாட்களாக சாலையில் ஓடும் கழிவு நீர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் கூடல் அழகர் பெருமாள் கோயில் இரண்டுக்கும் இடையில் உள்ள தெற்கு மாரட் வீதியில் மழை காரணமாக கழிவுநீர் பாதாள தொட்டி அடைபட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இந்த தெருவில் கழிவு நீர் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

மதுரையில் பெரும்பாலான வார்டுகளில் உள்ள குடிநீர் குழாய்களும், பாதாள சாக்கடைகளும், 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டவை. அதன்பின் எந்த ஒரு குடிநீர் குழாய்களும், பாதாள சாக்கடை குழாய்களும் சரியாக மாநகராட்சி சார்பில் முறையாக பாராமரிக்கப்படவில்லை.

இந்த தெருவில் இதற்கு முன்பும் இந்த பிரச்னை வந்த பொழுது மாநகராட்சி சார்பில் தற்காலிக சீரமைப்பு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்த தெருவில் மீண்டும் கழிவு நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மதுரை-செங்கோட்டை ரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து - காரணம் இதுதான்

மாநகராட்சி தற்காலிகமாக பிரச்சனை ஏற்படும்போது மட்டுமே சரி செய்கின்றனர். அதனால் மாநகரின் பல வார்டுகளில் நிரந்தரமாகவே அடிக்கடி பாதாளசாக்கடை அடைத்து சாலைகளின் மேலே பொங்கி சாலைகளில், தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுவதும், சில சமயங்களில் வீட்டிற்குள் உள்ள கழிப்பறை வழியாக பொங்குவதுமாக மக்கள் பெரும் சிரமத்தையும், துயத்தையும் சந்திக்கின்றனர். இப்பகுதி கூடல் அழகர் பெருமாள் கோயில் பின்புறம் என்பதால் சில கடைகள் இந்த தெருவில் இயங்கி வருகின்றன.

இதுகுறித்து கடை உரிமையாளர்கள் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக இந்த தெருவில் இதுபோல் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு இதுபோல் கழிவுநீர் பொங்கி வருவது நடக்கிறது. வீடுகள் மற்றும் கடைகள் முன் கழிவு நீர் தேங்குவதால் வாசலில் கால் வைக்க முடியவில்லை. வீட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை. மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரமாக இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டு பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க : ஆவின் பால் தாமதமாக விநியோகிக்கப்படுவதாக முகவர்கள் போராட்டம்

இதுகுறித்து 79வது வார்டு திமுக கவுன்சிலர் கார்த்தியிடம் பொதுமக்கள் புகார் அளித்த பொழுது அவர் தூய்மை பணியாளர்கள் கொண்டு தற்காலிகமாக கழிவுநீர் அடைப்புகளை எடுத்ததாக மட்டுமே தெரிகிறது, மதுரை மத்திய தொகுதிக்குள் வரும் இந்த தெருவை இதன் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதியமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இதனை கவனத்தில் கொண்டு பல வருடங்களாக தொடரும் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது இந்த 73வது வார்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இப்பகுதியில் குடிநீர் குழாய்களும் அதிகமாக உள்ளதால் கழிவுநீர் குடிநீருடன் கலக்கும் அபாயமும் உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசாங்கம் இதனை உடனடியாக கருத்தில் கொண்டு கூடிய விரைவாக சரிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயமும் உள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai