முகப்பு /செய்தி /மதுரை / “ எடப்பாடி பழனிசாமி சாதிக் கட்சி நடத்தி வருகிறார்..." - டிடிவி தினகரன் விமர்சனம்..!

“ எடப்பாடி பழனிசாமி சாதிக் கட்சி நடத்தி வருகிறார்..." - டிடிவி தினகரன் விமர்சனம்..!

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

Madurai TTV Dhinakaran speech | எடப்பாடி பழனிசாமி திமுகவிற்கு உதவி செய்கிறார் என்பதுதான் உண்மை காரணம் என டிடிவி தினகரன் விமர்சனம்.

  • Last Updated :
  • Madurai, India

எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஜாதி கட்சி நடத்தி வருகிறார்  என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூராணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியை டிடிவி தினகரன் ஏற்றிவைத்தார்.  அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு பொதுமக்களிடம் அமமுக பொது செயலாளர்டிடிவி தினகரன் பேசினர்.

அப்போது,  “எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருவது சாதி கட்சி தான்., நானும் ஓபிஎஸ்ஸும் இணைந்தது ஒரே ஜாதி என்பதால் இல்லை. அப்படி ஒரே சாதி என்றால் நாங்கள் எப்போதோ ஒன்றிணைந்திருப்போம். ஆனால், இப்போது துரோகம் செய்த எடப்பாடியை ஒழிக்க வேண்டும் என்பதால் ஒன்றிணைந்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி திமுகவிற்கு உதவி செய்கிறார் என்பதுதான் உண்மை காரணம்.

தேர்தல் ஆணையம் நீதிமன்றமும் இன்னும் எதுவும் முழுதாக சொல்லவில்லை. இடைக்கால உத்தரவுதான் கொடுத்திருக்கு. வருங்காலத்தில்  நாங்கள் அதிமுகவை மீட்டெடுப்போம்.  பன்னீர்செல்வம் நீதிமன்றத்தின் மூலம் அதை மீட்டெடுப்பார். ஜனநாயக ரீதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் ஓபிஎஸ்ஸும் நானும் சேர்ந்து மீட்டெடுப்போம். அதற்கு உங்கள் ஆதரவு தேவை என்று கேட்கத்தான் இந்த நேரத்தில் வந்திருக்கிறேன். இந்த துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டுகின்ற விதமாகவும் தமிழ்நாட்டை ஆளுகின்ற தீய சக்தியை வீழ்த்துகின்ற விதமாகவும் நீங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

செய்தியாளர்: சிவக்குமார், திருமங்கலம்.

First published:

Tags: Local News, Madurai, OPS - EPS, TTV Dhinakaran