முகப்பு /மதுரை /

மதுரையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை.. வேரோடு சாய்ந்த மரங்கள்!

மதுரையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை.. வேரோடு சாய்ந்த மரங்கள்!

X
வேரோடு

வேரோடு சாய்ந்த மரம்

Madurai rain | மதுரையில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் திடீரென்று பல்வேறு பகுதிகளில் சூறாவளி  காற்றுடன் கனமழை பெய்ததால், ஈகோ பார்க், சின்ன சொக்கிகுளம், தல்லாகுளம் போன்ற பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கோடைகாலமான சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அந்த வகையில் மதுரையில் கடந்த சில நாட்களாக,காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தாலும் மாலை நேரங்களில் அவ்வப்பொழுது சாரல் மழையும் கனமழையும் பெய்து வந்தது.

முன்னதாக, தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலம்காரணமாக புயல் உருவாகும் என்றும், இந்த புயலானது வங்க கடலில் இருந்து மியான்மரை நோக்கி செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மதுரையில் திடீரென்று சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, தல்லாகுளம், முனிச்சாலை, வில்லாபுரம், ஜெய்ஹிந்த் புரம், பெரியார் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

காற்று பலமாக வீசியதால், தல்லாகுளம் பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஈகோ பார்க்கில் பல மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லை என்பதால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

அதேபோல் தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், அண்ணா பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் 20-க்கும்மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில்,தீயணைப்பு துறையினர் வீழ்ந்து கிடந்த மரங்களை வெட்டிஅப்புறப்படுத்தினர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Heavy rain, Local News, Madurai