மதுரையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான கோரிப்பாளையத்தில் இருந்து, அண்ணா பஸ் ஸ்டாண்டு வரைக்கும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் ஆட்சியர் அலுவலகம் என முக்கியமான இடங்களில் காலையில் இருந்து இரவு வரை அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
‘மேலும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் இப்பகுதியில் செல்ல சிரமமாக இருப்பதா, சில நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இந்தப் பகுதியை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டுமென்று காவல்துறைக்கு பரிந்துரைத்தது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முதற்கட்டமாக போக்குவரத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது நகரின் முக்கியமானபகுதியான கோரிப்பாளையம், அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவள்ளுவர் சாலை வழியாக ஆவின் நகர் மேலமடை கே கே நகர் மாட்டுத்தாவணி போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய திருவள்ளுவர் சாலை பகுதியை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அடை ஆவின் நகர், கே.கே.நகர், மாட்டுத்தாவணி போன்ற பகுதிகளில் இருந்து அண்ணா பஸ் ஸ்டாண்ட், கோரிப்பாளையம், சொல்லுவதற்கு ஏதுவாக ஆவின் நகர் சாலை வழியாக உள்ள சினிப்ரியா தியேட்டர் அருகில் இருக்கும் சாலையை ஒருவழி பாதையாக மாற்றி,அப்பகுதி மூலம் அண்ணா பஸ் ஸ்டாண்ட் கோரிபாளையம் செல்லும் வழியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமான அண்ணா பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசல் குறையும் வகையில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Traffic, Two Wheeler