முகப்பு /மதுரை /

ஜனாதிபதி முர்மு வருகையால் மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

ஜனாதிபதி முர்மு வருகையால் மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மாதிரி படம்

மாதிரி படம்

Traffic change in Madurai : ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகையையொட்டி மதுரை மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகையையொட்டி மதுரை மாநகரில் நாளை மட்டும் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகையையொட்டி தெற்கு வாசல் சந்திப்பில் இருந்து பெருங்குடி வழியாக மண்டைல நகர் செல்லக்கூடிய பஸ்கள் மற்றும் பொதுமக்கள் முத்துப்பாலம் தேவர் பாலம் வழியாக பழங்காநத்தம். திருப்பரங்குன்றம், அவனியாபுரம், செம்பூரணி ரோடு வழியாக 4 வழிச்சாலையை அடைந்து மண்டேலா நகர் செல்ல வேண்டும்.

நகரில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள் அனைவரும் ரிங்ரோடு விரகனூர் சந்திப்பு மண்டேலா நகர் சந்திப்பு வழிகளையும் பயன்படுத்தியும் மற்றும் திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், செம்பூரணி ரோடு வழியாக 4 வழி சாலையை அடைந்து மண்டேலா நகர் சென்று பெருங்குடி வழியாக விமான நிலையம் செல்ல வேண்டும்.

மேலும் மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய அனைத்து பயணிகள் மற்றும் அவர்களுக்கான வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையம் செல்ல வேண்டும். விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றி சொல்லவோ, இறக்கி விடவோ வரும் வாகனங்களின் டிரைவர்கள் பயணங்களின் பயணச்சீட்டின் சாஃப்ட் காப்பியை தங்களது அலைபேசியில் வைத்திருக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai