ஹோம் /மதுரை /

மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எப்படி செல்ல வேண்டும்?

மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எப்படி செல்ல வேண்டும்?

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

Madurai Traffic Change | மதுரையில் சாலை மேம்பால கட்டுமான பணிகள் நடப்பதால், நாளை (நவம்பர் 3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் சாலை மேம்பால கட்டுமான பணிகள் நடப்பதால், நாளை (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டாக மதுரையில், நத்தம் சாலை மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது. இதையொட்டி போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த சாலைகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதன்படி பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் இருந்து யூத் ஹாஸ்டல் (ரேஸ்கோர்ஸ் சாலை) நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக தல்லாகுளம், தமுக்கம் மற்றும் கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து தொடர்ந்து அழகர்கோவில் சாலையில் பயணித்து, அம்பேத்கர் சிலை, அவுட்போஸ்ட் வழியாக தல்லாகுளம் செல்ல வேண்டும்.

புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள், பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து அழகர்கோவில் சாலையில் தொடர்ந்து பயணித்து, அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட கோர்ட்டு வழியாக செல்ல வேண்டும்.

நத்தம் சாலை, ஐ.ஓ.சி. சந்திப்பில் இருந்து கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள், பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் வலது புறம் திரும்பி அழகர்கோவில் சாலையில் பயணித்து அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட கோர்ட்டு வழியாக செல்லவேண்டும்.

Must Read : மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், தூரி பாலத்தில் ஷூட்டிங் நடத்தி ஹிட்டான படங்களின் லிஸ்ட்!

நத்தம் சாலை ஐ.ஓ.சி. சந்திப்பில் இருந்து தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகர்கோவில் சாலையில் பயணித்து அம்பேத்கர் சிலை, அவுட்போஸ்ட வழியாக செல்லவேண்டும். மதுரை மாநகராட்சி அலுவலக சாலை-அவுட் போஸ்ட் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சிலை வழியாக பாண்டியன் ஓட்டல் சந்திப்புக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கே.கே.ந கர் ஆர்ச்சில் இருந்து, அழகர்கோவில் சாலைக்கு கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, அவுட்போஸ்ட் வழியாக வலதுபுறம் திரும்பி பாரதியார் பூங்கா, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக தற்போது சென்று வரும் வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கக்கன் சிலையில் இருந்து வலதுபுறம் திரும்பி யூத் ஹாஸ்டல் (ரேஸ் கோர்ஸ் சாலை) பாண்டியன் ஓட்டல் வழியாக அழகர் கோவில் சாலைக்கு செல்ல வேண்டும் இவ்வாறு போலீசார் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Traffic