முகப்பு /மதுரை /

மதுரை மடீட்சியா அரங்கில் தொழில் வர்த்தக கண்காட்சி.. கண்டுகளித்த மக்கள்!

மதுரை மடீட்சியா அரங்கில் தொழில் வர்த்தக கண்காட்சி.. கண்டுகளித்த மக்கள்!

X
மதுரை

மதுரை மடீட்சியா அரங்கில் தொழில் வர்த்தக கண்காட்சி

Madurai News | மதுரை மடீட்சியா அரங்கில் நடைபெற்ற தொழில் வர்த்தக கண்காட்சியை அங்கு வந்த மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை கோர்ட் ரோடு அருகில் உள்ள மடீட்சியா அரங்கில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தொழில் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.

மதுரை நகரை ஒரு தொழில் மாநகரமாக மாற்றுவதற்காக மடீட்சியாசங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான தொழில் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் மகேந்திர கிரி இந்திய வான்வழி ஆராய்ச்சி மையம் சார்பாக ராக்கெட் மற்றும் அவர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளும் டிஸ்ப்ளே செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் என 60 ஸ்டால்கள் உள்ளது. இந்த ஸ்டால்களை மதுரை மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். கண்காட்சியின் இறுதி நாளில் வழகத்தைவிடகூடுதல் நேரம் நடைபெற்றது. அதன்படிகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.

First published:

Tags: Local News, Madurai