ஹோம் /மதுரை /

மதுரையில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்கள் ஏரியா இருக்கா?

மதுரையில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்கள் ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

Madurai District | மழைக்கால பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை மாவட்டத்தில் நாளை (நவம்பர் 22) மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆரப்பாளையம், அரசரடி பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தெற்கு ஆரப்பாளையம், அரசரடி துணைமின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மழைக்கால பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே ஆரப்பாளையம் நிலையத்திற்குட்பட்ட சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில்ரோடு, கனகவேல் காலனி, மணிநகர் மெயின்தெருக்கள் 1-2, ஒர்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் நாள் மின் வினியோகம் இருக்காது.

இதேபோல, திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1 மற்றும் 4-வது தெரு, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு-மெயின்ரோடு, புட்டு தோப்புமெயின் ரோடு, எச்.எம்.எஸ்.காலனி, மேலப் பொன்னகரம் மெயின்ரோடு, புது ஜெயில்ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின்ரோடு, ராஜேந்திர மெயின்ரோடு 1-2 தெரு, பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், அரசரடி பகுயில் உள்ள ஜெயில் காலனி, முரட்டான் பத்திரி, கிரம்மர்புரம், கரிமேடு ஏரியா, மேலபொன்னகரம் மெயின்ரோடு, இளந்தோப்பு 1-3 தெருக்கள் ராஜேந்திரா தெருக்கள் 1-3, மில்கேட், மணிஐயர் சந்து, ஸ்காட்ரோடு, எல்.ஐ.சி. குட்செட் தெரு, மேலமராட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, சம்பந்தமூர்த்தி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என மின்செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

Must Read :தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

எனவே, இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள். மேலும், மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown