Home /madurai /

மதுரையில் நாளை முக்கிய இடங்களில் பவர் கட்!

மதுரையில் நாளை முக்கிய இடங்களில் பவர் கட்!

மின்தடை

மின்தடை

மதுரையில் உள்ள முக்கிய துணைமின் நிலையங்களில் நாளை (செவ்வாய் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மற்றும் அனுப்பானடி துணைமின் நிலையங்களில் மழைகால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை (செப்டம்பர் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் கண் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால் பண்ணை, ஐராவதநல்லுார், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார்நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி.காலனி, முந்திரிதோப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சேவுகப் பெருமாள் கோவில் பகுதிகள், மாரியம்மன் தெப்பகுளம் தெற்கு, அடைக்கலம் காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி- தெப்பகுளம்ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிஷர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிக்காரத்தோப்பு, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி, மேல அனுப்பானடி கிழக்கு பகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி. ரோடு, மீனாட்சி அெவன்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Local News, Madurai, Power cut

அடுத்த செய்தி