Home /madurai /

திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு- மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு- மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருநெல்வேலி-தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜனவரி மாதம் வரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் மதுரை கிளை அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    திருநெல்வேலி-தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜனவரி மாதம் வரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் மதுரை கிளை அறிவித்துள்ளது.
    மேலும், பயணிகளின் கூட்ட நெரிசலையும் இந்த ரயில் குறைக்கும் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்படும் வாரந்திர சிறப்பு கட்டண ரெயில் (எண்.06004). இந்த மாதம் 18, 25, அக்டோபர் 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

    மேலும் நவம்பர் மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், ஜனவரி மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும்.

    இந்த ரயில் திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இதேபோல தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

    இந்த ரெயில் வருகிற 19, 26, அக்டோபர் மாதம் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதியிலும் நவம்பர் மாதம் 7, 14, 21, 28 தேதியிலும், டிசம்பர் மாதம் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. தென்மாவட்டத்திற்கு செல்லக்கூடியவர்கள் சிறப்பு ரயிலில் முன் பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணிக்கலாம்.

    எழும்பூரில் இருந்து புறப்படக்கூடிய ரெயில்களில் இடம் நெருக்கடி இருக்கின்ற நிலையில் சிறப்பு ரயில் வசதியை பயன்படுத்தலாம் என்று இவ்வாறு மதுரை தெற்கு ரயில்வே நிர்வாகம் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி