மதுரை மாநகரமே களைகட்ட கூடிய வகையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. மீனாட்சி திருகல்யாணத்திலிருந்து கள்ளழகர் தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரை இத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பரம் முகூர்த்த விழா கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்னா வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நடைபெறும்.
அதாவது மதுரையை மன்னர்கள் ஆண்ட காலத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவில் பிரம்மாண்டமாக ஆயிரம் பொன் செலவில் மூன்று மாதங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துண்டு செய்யப்பட்ட சப்ரத்தில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். ஆயிரம் பொன் செலவில் செய்யப்பட்டதால் இதற்கு ஆயிரம் பொன் சப்பரம் என்று பெயர் வந்தது.
ஆனால் தற்பொழுது கள்ளழகர் வைகை ஆற்றல் சப்பரம் இல்லாமல் தங்க குதிரை வாகனத்திலேயே எழுந்தருளுகிறார். இருப்பினும் சம்பிரதாயம் படி இன்றளவும் ஆயிரம் பொன் சப்பரம் செய்யும் சப்புற முகூர்த்தத்துடன் திருவிழா நடைபெறும்.அந்த வகையில் அருள்மிகு கள்ளழகர் கோவிலின் சார்பா அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இத்திருக்கோவிலின் 1,432 ஆம் பசலி சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு கொட்டகை முகூர்த்த விழா வருகின்ற 20தாம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 8:45 மணிக்கு மேல் 9 15 மணிக்குள் தல்லாகுளம் அருள்மிகு பிரசன்னா வெங்கடாசலபதி திருக்கோவில் சன்னதியில் சித்திரைத் திருவிழா முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலைய அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் மதுரை வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெற உள்ளது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.