மதுரை தேர்முட்டி சாலையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தோப்பறை விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதத்தின் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில் வருகின்ற மே இரண்டாம் தேதி திருக்கல்யாணமும், மே ஐந்தாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறும் இந்த நிகழ்வை முன்னிட்டு கள்ளழகர் வேடமடைந்த பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சி அடிக்கும் நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்வு நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதினால் தேர்முட்டி சாலை பகுதியில் கள்ளழகர் வேடமடைந்த பக்தர்கள் அனைவரும் தண்ணீர் பிச்சு அடிக்கக்கூடிய பைகளான தோப்பறை பைகளை வாங்குவதில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய கள்ளழகர் வேடமணியும் பக்தர்கள், அழகர் கோவிலில் இருந்து வரும் அழகுமலையானுக்கு எங்கள் பாட்டன் காலத்தில் இருந்து நாங்கள் தண்ணீர் பீச்சுவது என்பது வழக்கமாக உள்ளது இதனை நாங்கள் தற்பொழுது வரை தொடர்ந்து நேர்த்திக்கடனாக செய்து வருகின்றோம் இதனை பரம்பரை பரம்பரையாக செய்து வரும் நேர்த்திக் கடனாக நாங்கள் கருதுகின்றோம். 21 நாட்கள் விரதம் இருந்து மாலை அணிந்து அழகு மலையானுக்காக கள்ளழகர் வேடம் அணிந்து தண்ணீர் பீச்சி அடிப்போம். தோப்பறையில் தான் தண்ணீர் பீச்சி அடிப்பது என்பது ஐதீகம் ஆகையால் இங்கு விற்கப்படும் தோப்பறையை வாங்கி அதனை தைத்து அதனுள் சந்தனம் பன்னீர் மஞ்சள் ஆகியவற்றுடன் தண்ணீரை கலந்து பக்தர்களுக்கும் அழகுமலையான்னுக்கும் பீச்சு அடிப்போம்.
கள்ளழகர் வேடம் அணிந்து வரும் நாங்கள் இங்கிருந்து தல்லாகுளம் பெருமாள் கோவில் சென்று மறுநாள் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை தரிசனம் செய்து தண்ணீர் பீச்சி அடித்து அதன் பிறகு ராமராயர் மண்டபம் அருகே தீர்த்தவாரியில் கள்ளழகரை குளிர்விக்கும் வகையில் தோப்பறை மூலமாக தண்ணீரை பீச்சி அடித்து குளிர்விப்போம்.
இதையும் படிங்க | சித்திரை திருவிழா 8 ஆம் நாள் - மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
இது காலகாலமாக நடந்து வரும் ஐதீகம் இதனை நாங்கள் ஒரு வருடமும் விடாமல் ஒவ்வொரு வருடமும் நேர்த்திக்கடனாக செய்து வருகின்றோம் என்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு தோப்பறையை நான் ஊரில் இருந்து 600 800 வரைக்கும் விற்பனை செய்து வருகின்றார்கள் இதனை கள்ளழகர் வேடமணியையும் பக்தர்கள் தண்ணீர் வீசுவதற்காக தற்பொழுது இருந்து வாங்கிக் கொண்டு செல்கின்றார்கள் இதனால் இப்பகுதியில் சித்திரைத் திருவிழா கலைகட்ட தொடங்கியுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.