முகப்பு /மதுரை /

மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் வேடத்தில் தண்ணீர் பீச்சும் தோப்பறை பற்றி தெரியுமா!

மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் வேடத்தில் தண்ணீர் பீச்சும் தோப்பறை பற்றி தெரியுமா!

X
மதுரை

மதுரை தோப்பறை

Madurai chithirai festival | மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் கள்ளழகர் வேடமடைந்த பக்தர்கள் தண்ணீர் பீச்சும் தோப்பறை பற்றி தெரிந்துகொள்வோம்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையே களைகட்டக்கூடிய சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுதான் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு. இந்த நிகழ்வில் மக்கள் அனைவரும் நோயின்றி இருக்கவும் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்று கள்ளழகர் வேடம் அணிந்து பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்தி கடனாக மாலை அணிந்து தண்ணீர் பீச்சி அடிப்பது வழக்கம்.அப்படி தண்ணீர் பீச்சி அடிக்கக்கூடிய பைதான் தோப்பறை என்று சொல்வார்கள்.

இந்த தோப்பறை பைகளை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி என்ற பகுதியில் உள்ள மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்டு தோல் பைகளை தயார் செய்து வருகின்றார்கள். அப்படி தயார் பண்ணும் பைகளை சித்திரை திருவிழாவிற்காக மதுரையில் உள்ள தேர்முட்டி சாலை பகுதியில் விற்பனை செய்து வருகின்றார்கள். இந்த ஆட்டு தோல் பைகளை எப்படி எல்லாம் தயார் செய்துஇங்கு வந்து விற்பனை செய்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டோம். அவர்கள் விளக்கம் அளித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி என்பது தான் எங்கள் ஊர். சுமார் நான்கு தலைமுறை ஆக இத்தொழிலை செய்து வருகின்றோம். குறிப்பாக இத்தொழிலை சித்திரைத் திருவிழா அழகு மலையனுக்காகத்தான் தற்பொழுது வரை செய்து கொண்டிருக்கின்றோம்.இத்தொழிலை சித்திரைத் திருவிழா வருவதற்கு மூன்று மாதம் முன்பு செய்யத் தொடங்கி விடுவோம்.

இரண்டு வகையான தோப்பறை உள்ளன.வெள்ளைப் தோப்பறை, சிவப்பு தோப்பறை. சந்தையிலிருந்து ஆட்டு தோலை வாங்கி அதை ஒரு இடத்தில் அதன் முடியை எடுக்க கொடுத்துவிட்டு பின்பு வெள்ளைத் தோலை மட்டும் பாடம் பண்ணுவதற்கு மெஷினில் கொடுத்து விடுவோம். பின்பு அதை எடுத்து வந்து தோப்பு கட்டை வைத்து தேச்சு பாடம் செய்வோம்.

இதே போல் சிவப்பு நிற தோப்பறையை நாங்களே தயார் செய்வோம்.சுண்ணாம்பு, ஆவாரம், கடுக்காய், கருவேலம்பட்டை போன்றவற்றை வைத்து பத்து நாட்கள்பாடம் கட்டி காய போட செய்வோம். பிறகு ஜவ்வுபுரத்திலிருந்து மேனியை திருப்பி, மீண்டும் காய போடுவோம். மீண்டும் காய போட்டதை எடுத்து பாட்டிலால் தேய்த்து சமம் படுத்தி மீண்டும் தண்ணீரில் முக்கிய பிறகு காய போட்டு அதன் மேல் அரிசி மூட்டை, நெல்லு மூட்டை போன்ற கனமான பொருட்களை கொண்டு அழுத்தி வைப்போம்.

இதையும் படிங்க | கோபமாக ஆற்றில் இறங்கிய கள்ளழகர் எங்கே சென்றார் ?

பரம்பரை பரம்பரையாகவும், பாரம்பரியமாகவும் இதை செய்து வருவதினால் சித்திரை மாதம் வந்தாலே சுமார் மூன்று மாதங்களாக மற்ற வேலைகளை விட்டுவிட்டு அதாவது, நாங்கள் கொத்தனார், சித்தாள் வேலை எல்லாம் செய்வோம் அதை எல்லாம் இந்த காலத்தில் மட்டும் விட்டுவிட்டு இந்த வேலைகள் எல்லாம் செய்து மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக அதாவது சுமார் 15 நாட்கள் மட்டும் தேவைப்படும் தோப்பறைகளை செய்து இங்கு வந்து விற்பனை செய்கின்றோம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்னாள் வரை இங்கேயே இருந்து ஒரு தொண்டாக இத்தொழிலை செய்து விற்பனை செய்வோம்.

அழகுமலையானுக்கு நேர்த்திக்கடனாக தோப்பறையை வாங்க வரும் பக்தர்கள் மிஷின் மற்றும் பாரம்பரிய தோப்பறைகளை 500 லிருந்து 300 ரூபாய்க்கு கேட்பார்கள் நாங்கள் கொடுப்பது 700 ல் இருந்து 400 வரை இருக்கும் இருந்தாலும் அழகுமலையனுக்காக அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுத்து விற்பனை செய்வோம் என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Madurai, Madurai Chithirai Festival