முகப்பு /மதுரை /

மதுரையில் இங்கு மட்டும்தான் இந்த கடை உள்ளது.. 23 வருடம் பழமையான கோனார் சூப் கடை..

மதுரையில் இங்கு மட்டும்தான் இந்த கடை உள்ளது.. 23 வருடம் பழமையான கோனார் சூப் கடை..

X
மதுரை

மதுரை

Konar Soup Shop | மதுரையின் 23 வருடம் பழமையான ஃபேமஸான கோனார் சூப் கடை பற்றி செய்திகுறிப்பு.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள சுகுணா ஸ்டோர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ளது இந்த கோனார் சூப் கடை. சுமார் 23 வருடம் பழமையான இந்த கடையை அண்ணன், தம்பி சொந்தக்காரர்கள் சேர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றனர். காலையில் 11 மணி அளவில் இருந்து இவர்கள் இணைந்து காய்கறி வெட்டி இஞ்சி, பூண்டு போன்ற பொருட்களை கைகளிலேயே இடித்து இவர்களின் ஸ்பெஷலான மசாலாவை சேர்த்து தரமான சுவையில் குடல் ரத்த பொரியல், ஆட்டுக்கால் பாயா போன்ற வெரைட்டியான நான்வெஜ் உணவுகளை செய்ய ஆரம்பிக்கின்றனர்.

எப்படி தயார் செய்கின்றனர்?

கடையின் ஒரு பகுதியில் தேவையான அனைத்து பொருட்களை ரெடி செய்யும் வேலையும், இன்னொரு பகுதியில் அடுப்பை வைத்து சூப்களை தயார் செய்யும் வேலை என்று விறுவிறுப்பாக நடக்கிறது. சுமார் 4 மணி அளவில் இந்த கடை முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது. ஏன் என்று பார்த்தீர்கள் என்றால் இந்த கடையில் விற்கக்கூடிய டேஸ்ட்டான சூப்பிற்கும் ஸ்பெஷலான ஆட்டுக்கால் பாயாவிற்கும் என்று ஒரு தனி கூட்டமே இருக்கிறது.

சிறு துளி பெரு வெள்ளம்

இதுகுறித்து கடை உரிமையாளர் சண்முகம் கூறும்போது,

“நாங்கள் அனைவரும் இணைந்து சுமார் 23 வருடங்களாக இந்த கடையை நடத்தி வருகிறோம். முதலில் சிறியதாக தொடங்கிய எங்கள் தொழில் நல்ல முன்னேற்றத்தை கண்டதால் தற்போது வரை இந்த தொழிலையே மக்களுக்கு தொண்டு செய்வதனை போல் செய்து கொண்டு வருகிறோம். ஆரம்ப காலகட்டத்தில் இந்த கடையில் சிக்கன், மட்டன் மற்றும் வெஜ் சூப் போன்றவையை தான் விற்று கொண்டு வந்தோம்.

கோனார் சூப் கடை

பின்பு நாளடைவில் மக்கள் எங்கள் கடையில் விற்கப்படும் சூப்பிற்கு அதிகமான வரவேற்பு கொடுத்ததால் அசைவத்திலேயே இன்னும் சிறப்பாக கொடுக்கலாம் என்று தற்போது நாட்டுக்கோழி, ஆட்டுக்கால், வெஜ் சூப் போன்றவையும் ஆட்டுக்கால் பாயா, குடல் கிரேவி, ரத்த பொரியல் என்று அசைவத்தில் உடம்பிற்கு பலம் தரக்கூடிய உணவுகளை தரமான மற்றும் சுவையான முறையில் செய்து கொடுக்கிறோம்.

இதையும் படிங்க : குடும்பத்தோடு போய் என்ஜாய் பன்னுங்க..! குமரியில் களைகட்டிய கோடை பொருட்காட்சி..!

7 ரூபாய்க்கு விற்கப்பட்டது

இந்த கடை ஆரம்பித்த அன்று 7 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். பின்பு நாளடைவில் 10 ,20 என்று தற்பொழுது 30 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். பார்சல் என்றால் 40 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். கோனார் சூப் கடையின் ஸ்பெஷல் என்னவென்று கேட்டால் எந்த ஒரு மிஷின் பொருட்களை பயன்படுத்தாமல் கைகளிலேயே இஞ்சி, பூண்டு பேஸ்ட் போன்ற பொருட்களை அரைத்து நாட்டுக்கோழி ஆட்டுக்கால் போன்றவற்றை இடிச்சி பழமையான மற்றும் பாரம்பரியமான முறையில் செய்வதினால் அதில் வரும் டேஸ்டிற்காகவே கோனார் சூப் கடைக்கு என்று மக்கள் வரவேற்பு உள்ளது.

பொதுவாக இங்கு வந்து சூப் குடித்தால் உடலுக்கு மருந்து கிடைப்பது போல் இருக்கும் என்றும் பொதுமக்கள் கூறி இருக்கின்றனர். சூப் வகைகள் 30க்கும் ஆட்டுக்கால் பாயா ரூ.70க்கும், குடல் கிரேவி மற்றும் ரத்த பொரியல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறோம்” என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நெகிழும் வாடிக்கையாளர்கள்

top videos

    இதுகுறித்து வாடிக்கையாளர்களும் கூறும்போது, “நாங்கள் வேலை முடித்து வந்தால் வேலையின் களைப்பை போக்கக்கூடிய வகையில் இங்கு வந்து தான் ஆட்டுக்கால் பாயா மற்றும் நாட்டுக்கோழி சூப் போன்றவற்றை சாப்பிடுகிறோம். மதுரையில் பேமஸான இந்த சூப் கடையில் தான் ஒரு தனியான சுவை இருக்கிறது. மதுரையில் மற்ற கடைகளில் இந்த அளவிற்கு சுவை இல்லை என்பதால் கடந்த 7 வருடங்களாகவே இங்கு வந்து தான் சூப் குடித்துக் கொண்டிருக்கிறோம். மிகவும் அருமையாக மற்றும் சுத்தமான முறையில் தரமான சுவையிலும் செய்து கொடுக்கின்றனர்”  என்றனர்.

    First published:

    Tags: Local News, Madurai