கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதானது தலா ரூ.20 ஆயிரம், ரூ.10ஆயிரம், ரூ.5 ஆயிரம் என தகுதி உடையோர்களுக்கு வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயலாற்றல் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக திகழும் பட்சத்தில் இந்த பதக்கத்தைப் பெறத் தகுதி உடையவர் ஆவார்கள்.
இந்த விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேற்கண்ட விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Must Read : ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!
பூர்த்தி செய்த 3 விண்ணப்பப் படிவங்கள் வருகிற 12-12-2022 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் ஒப்படைக்கப்பட வேண்டும். மேற்படி தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து விருதினை பெறலாம் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai